ஈஸ்வரிக்கு கோபி செய்து கொடுத்த சத்தியம்.. அப்போ ராதிகா நிலைமை- கொதிப்பில் பாக்கியா
ஈஸ்வரிக்கு கோபி செய்து கொடுத்த சத்தியத்தால் மீண்டும் ஒரு பிரச்சினை வெடிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பாக்கியலட்சுமி
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் கோபி, இனியா, செழியன் மூன்று பேருக்கும் ஈஸ்வரி சாப்பாடு ஊட்டி கொண்டு இருக்க எல்லோரும் சந்தோஷமாக சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றனர்.
அப்போது “இனியா கல்யாணத்தை கிராண்டா பண்ணிடு கோபி, நான் அதுவரைக்கும் இருக்க மாட்டேன்“ என்று ஈஸ்வரி சொல்ல, அதற்கு கோபி “நீங்க இனியா கூட குழந்தையின் கல்யாணத்தையும் பார்ப்பீங்க” என சொல்கிறார். இப்படி அனைவரும் சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்கின்றனர்.
அதே மறுபக்கத்தில் பாக்கியா கிச்சனில் வேலை செய்து கொண்டிருக்கும் போது ஜெனி செல்வி மூன்று பேரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
அப்போது “இனியாவின் ஸ்டேட்டஸை பாத்தீங்களா?” என கேட்க,“ இல்லையே போன் தூரமா இருக்கு..” என பாக்யா சொன்னதும் ஜெனி போனில் ஸ்டேட்டஸ் காட்டுகிறார். அதில் கோபிக்கு ஈஸ்வரி சாப்பாடு ஊட்டும் போட்டோ ஒன்று இருக்கிறது.
அதனை பாக்யா பார்த்து விட்டு டென்ஷன் ஆகி “இவங்க பண்ற அலம்பல் தாங்க முடியல.. கொஞ்ச நாளைக்கு முன்னாடியே பையனே இல்லைன்னு தலை முழுங்குறாங்க. இந்த இனியாவும் செழியணும் அவர் பண்ணுனதெல்லாம் தப்புன்னு சொன்னாங்க ஆனா இப்போ நம்புறாங்க..” என பேசுகிறார்.
கோபி செய்த சத்தியம்
ப்ரீஸ் டாஸ்கில் பிக்பாஸ் வைத்த Last Twist- நாளை வரவிருக்கும் “அந்த” இரு நபர்கள்- காத்திருக்கும் ரசிகர்கள்
இந்த நிலையில், “கோபி எப்போதும் என்னை விட்டு போகவே கூடாது” என்று ஈஸ்வரி குலதெய்வம் முன்பு சத்தியம் கேட்கிறார். அவரும் வேறு வழியில்லாமல் சத்தியம் செய்து கொடுக்கிறார்.
இது ஒருபுறம் இருக்கையில், ராதிகா வீட்டில் இருக்கும் எல்லா பொருட்களையும் எடுத்து வைத்துக் கொண்டிருக்கும் போது ராதிகா,“அம்மா நீ எல்லாத்தையும் எடுத்து வச்சுட்டியா?” என்று கேட்கிறார்.
அதற்கு ராதிகாவின் அம்மா,“கண்டிப்பாக வீடு காலி பண்ணி தான் ஆகணுமா?” என சொன்னதும் ராதிகா எதுவும் பேசாமல் போனை எடுத்து காட்ட அதில் ஈஸ்வரி கோபிக்கு சாப்பாடு ஊட்டும் படத்தை காட்டுகிறார்.
கோபி செய்த சத்தியத்திற்காக ராதிகா விட்டுவிட்டு அவருடைய அம்மாவுடன் இருந்து விடுவாரா இல்லையா? என்பதனை இனி வரும் எபிசோட்டில் பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |