ஜெயிலுக்கு அனுப்பிய பாக்கியா.. எதிராக நிற்கும் குடும்பத்தினர்- ராதிகாவின் முடிவு என்ன?
பாக்கியலட்சுமி சீரியலில் கோபியை அவருடைய முன்னாள் மனைவி பாக்கியா ஊழல் குற்றத்திற்காக பொலிஸாரிடம் பிடித்து கொடுத்திருக்கிறார்.
பாக்கியலட்சுமி
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பரபரப்பான சீரியல்களில் ஒன்று தான் பாக்கியலட்சுமி.
இந்த சீரியலில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் பாக்கியாவின் கேன்டீனில் வேலையாள் வைத்து ஊழல் செய்து கோபி வசமாக சிக்கியுள்ளார்.
இதனை தெரிந்து கொண்ட பாக்கியா அவரின் வீட்டிற்கே சென்று ராதிகா முன் அனைத்தையும் சொல்லிவிட்ட வந்து விடுகிறார். அத்துடன் நிறத்தாமல் வேலையாளுடன் காவல் நிலையத்துக்கு சென்று புகாரும் கொடுத்து விடுகிறார்.
இதனை தொடர்ந்து அதிகாரி நடவடிக்கை எடுப்பதாக கூறுகிறார். இப்படி இருக்கையில், காவல் நிலையம் சென்று செல்வியுடன் பாக்கியா வீட்டிற்கு வருகிறார். ஜெனி, செழியன், இனியா, ஈஸ்வரி என நான்கு பேரும் அமர்ந்து கோபியின் சதி வேலை குறித்து பேசிக் கொண்டிருக்கிறார்.
அப்போது பாக்கியாவிடம் செழியன், “ அப்பா தான் அப்படி பண்ணுனாருன்னு உனக்கு முதலிலேயே தெரியுமா? என்று கேட்க, அதற்கு பாக்கியா“ தெரியும்” என பதில் கொடுக்கிறார். பின்னர் செழியன், “ஏம்மா எங்ககிட்ட சொல்லல?” என கேட்க பாக்கியாவிற்கு அதிகமாக கோபம் வந்து விடுகிறது.
பாக்கியா எடுத்த கடைசி முடிவு
இந்நிலையில், “சொல்லியிருந்தால் என்ன பண்ணி இருப்பீங்க? எதுவும் பண்ணிருக்க முடியாது இல்ல, அதனால தான் சொல்லல..” என கூறுகிறார், இனியா, “ அப்பா செஞ்சது தப்புதான்.. பெரிய தப்புதான் நான் இல்லைன்னு சொல்லல. ஆனா நீ பண்ணதும் தப்புதான்.” என அவரும் அப்பாவுக்கு ஆதரவாக பேச ஆரம்பிக்கிறார்.
உடனே தகவல் அறிந்து குடும்பத்துடன் வீட்டிற்கு வந்த எழில், “அம்மாவை பூஜைக்கு வர வேண்டாம்..” என தயாரிப்பாளரை வைத்து சொல்ல வைத்ததே அப்பா தான் என அனைத்து உண்மையையும் கூறுகிறார்.
அனைத்தையும் கேட்டு கொண்டிருந்த ஈஸ்வரி, “ என்ன தவறு செய்தாலும் பொலிஸ் புகார் செய்தது தவறு பாக்கியா..” என்கிறார் அதற்கு பாக்கியா, “ யாராக இருந்தாலும் தவறு செய்தால் தண்டனை கிடைக்கும்..” என அவரின் முடிவில் உறுதியாக இருக்கிறார்.
இது ஒரு புறம் இருக்கையில் ராதிகாவும், கோபிக்கு எதிராக நிற்கிறார். கோபியின் பழிவாங்கல் முயற்சியில் ராதிகாவிற்கு துளியளவும் விருப்பம் இல்லை. மாறாக கோபி அதனை கேட்பது போன்று இல்லை.
இன்றைய தினம் வெளியான ப்ரோமோ ராதிகா சிறைக்கு சென்ற கோபியை எடுப்பதற்கு தயாராக இல்லை என உறுதியாக கூறி விடுகிறார். அப்போது கோபியை எடுக்க யார் வருவார் என்பதனை தொடர்ந்து பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |