ஆகாஷை விரட்டி விரட்டி அடித்த செழியன்- வீட்டை விட்டு வெளியேறும் கோபி- கொதிப்பில் பாக்கியா
செழியன் ஆகாஷை விரட்டி விரட்டி அடித்ததால் பாக்கியா ஒரு முடிவுக்கு வந்துள்ளார்.
பாக்கியலட்சுமி
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி.
மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகியுள்ள இந்த சீரியலை ஆண்களும் அவதானித்து வருகின்றனர். நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பெண் பாக்கியா, கணவரின் உதவி இல்லாமல் தனது கடமைகளை செய்து பிள்ளைகளை எப்படி பார்த்து கொள்கிறார் என்பதனை கருவாக வைத்து எடுக்கபட்டு வருகிறது.
இதற்கிடையே கணவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ள பெண், பாக்கியாவின் தோழியாகவும் கதை ஆரம்பிக்கப்பட்டது. தற்போது இரண்டாவது திருமண வாழ்க்கையும் விவாகரத்து ஆன நிலையில், கோபி பாக்கியா வீட்டில் இருந்து வருகின்றார். இவற்றையெல்லாம் கண்டுக் கொள்ளாமல் பாக்கியாவும் தனது தொழிலில் முன்னேறிச் செல்கின்றார்.
இதனிடையே இனியா- ஆகாஷ் காதல் கோபிக்கு தெரியவந்துள்ளது. உடனே வீட்டில் உள்ள அனைவரிடமும் அம்பலப்படுத்தியுள்ளார். அத்தருணத்தில் விடயம் அறியாத செல்வி வீட்டிற்கு வரவே வீட்டில் உள்ள அனைவரும் செல்வியை வெளியே செல்லுமாறு துரத்தியுள்ளனர். ஆனால் பாக்கியா செல்வியை எதுவும் கூறாமல் இருக்கும் நிலையில், அவர் செல்வியை உறவாக நினைத்து குறித்த காதலுக்கு சம்மதம் கூறுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
பளார் என விழுந்த அறை
இந்த நிலையில், இனியாவுக்கு என்ன நடந்தது என தெரிந்து கொள்ள நினைக்கும் ஆகாஷ் அவரை தொடர்பு கொண்டு பேச முயற்சிக்கிறார். இதனால் கடுப்பான செழியன்- கோபி இருவரும் செல்வியின் வீட்டிற்கு சென்று ஆகாஷை கடுமையாக அடிக்கிறார்.
இந்த விடயம் பாக்கியாவிற்கு தெரிந்த போது வீட்டிற்கு வந்து செழியனிடம் கேட்க,“ அவனை கொன்று விடுவேன்..” என்கிறார். பாக்கியா பளார் என அறைகிறார். இதனை பார்த்துக் கொண்டிருந்த கோபி,“பாக்கியா” என கத்துகிறார்.
“இவ்வளவு நாட்கள் பிள்ளைகளுக்காக உங்களை சகித்து கொண்டேன். இனியும் என்னால் முடியாது.. வெளியே போங்க..” என பாக்கியா கூறுகிறார். இது கோபிக்கு சற்று அதிர்ச்சியாக இருந்தாலும் இதற்கு வீட்டிலுள்ளவர்கள் என்ன பதில் கொடுப்பார்கள் என்பதனை பொறுத்திருந்து பார்க்கலாம்.
இப்படியாக இந்த வாரத்திற்கான ப்ரோமோ காட்சிகள் வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |