பாக்கியலட்சுமி சீரியலில் திடீரென வந்து நின்ற அம்ரிதாவின் முன்னாள் கணவர்: பரபரப்பான கதைக்களம்
இதுவரை காலமும் இறந்ததாக சொல்லப்பட்டிருந்த அம்ரித்தாவின் கணவன் திரும்பி வந்த பரபரப்பான காட்சி ப்ரோமோவாக வெளியாகியுள்ளது.
பாக்கியலட்சுமி சீரியல்
பாக்கியலட்சுமி சீரியல் பிரபல தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் பாக்கியலட்சுமி. இது ஒரு இல்லத்தரசியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட தொடராகும்.
இந்த சீரியல் தொடருக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. அடுத்து என்ன நடக்கும் என்ற பரபரப்போடு நாளுக்கு நாள் சுவாரஸ்யம் குறையாமல் நகர்ந்துக் கொண்டிருக்கிறது இந்த தொடர்.
இந்தத் தொடரில் தற்போது பாக்யாவின் நிலைமை அதிரடி காட்டி வரும் பெண் போல காட்டி வருகிறார்கள். கணவனிடம் இருந்து விவாகரத்து பெற்ற பெண் ஒருவர் சந்திக்கும் சவால்களையும் அவர் கணவரை எதிர்த்து வெற்றி பெற்று கெத்து காட்டும் கதையாக காட்டி வருகிறார்கள்.
மீண்டு வந்த கணவர்
இந்நிலையில், பாக்கியாவின் இரண்டாவது மருமகளும் எழிலின் மனைவியாகவும் நடித்து வரும் அம்ரித்தாவின் கணவர் ஒரு விபத்தில் உயிரிழந்திருந்தார்.
ஆனால் தற்போது அவரின் நினைவு நாளுக்கு படையல் போடும் வேளையில் உயிருடன் வரும் காட்சிகள் ப்ரோமாவாக வெளியாகியுள்ளது.
கணவர் இறந்ததால் தான் அம்ரித்தா இரண்டாவது திருமணம் செய்துக் கொண்டார் ஆனால் தற்போது கணவர் மீண்டும் உயிருடன் வந்ததைக் கண்டு என்னென்ன நடக்குமோ என்பதை பரபரப்பாக காட்டியிருக்கிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |