குடும்பத்துடன் குதூகளிக்கும் கோபி...! ராதிகா பேரைக் கேட்டு அலறி அடித்து ஓட்டம்! சூடு பிடிக்கும் காட்சி
எழில் சொன்ன ஒரு வார்த்தையால் பாக்யா முன்பு அசிக்கப்பட்டு நிற்கும் கோபியை பார்த்து மொத்த குடும்பமே சிரித்து கேலி செய்யும் காட்சி இன்று ப்ரோமோவாக வெளியாகியுள்ளது.
பாக்கிலட்சுமி சீரியல்
பாக்கியலட்சுமி சீரியல் பிரபல தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் பாக்கியலட்சுமி. இது ஒரு இல்லத்தரசியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட தொடராகும்.
இந்த சீரியல் தான் இப்போது டாப்பில் இருக்கிறது. இந்த சீரியலுக்கு பெருமளவான மக்கள் ஆதரவைக் கொடுத்து உச்சத்தில் வைத்திருக்கிறார்கள்.
இந்த சீரியலில் பாக்கியா, கோபி,ராதிகா என மூன்று கதாப்பாத்திரத்தை வைத்து அனைவரையும் பரபரப்பின் உச்சத்திற்கு கொண்டு சென்றுக் கொண்டிருக்கிறார்கள்.
சூடு பிடிக்கும் ப்ரோமோ
அந்தவகையில் இன்றைய ப்ரோமோ காட்சியில் பாக்கியா, எழில், அமிர்தா ஜெனி, செழியன் இனிய என எல்லோரும் ஒன்றாக உட்கார்ந்து சந்தோஷமாக பேசி சிரித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அப்போது, எட்டிப் பார்த்த கோபி இதுவும் என் பேமிலி தானே நான் மட்டு ஏன் தனியா இருக்கனு நானும் போய் உட்காருவேன் என கோபி உள்ளே வந்து என்ன காமெடின்னு சொன்னா நானும் சிரிப்பேன் இல்ல என்று எழில் பக்கத்தில் உட்காருகிறார்.
அப்போது எழில் லேசாக கண்ணை காட்ட என்னடா என்னடா எனக் கேட்க அவங்க என சொல்ல எதுவும் தெரியாமல் தெரியாமல் இருந்த கோபிக்கு கொஞ்சம் மெதுவாக ராதிகா என காது கடிக்க உட்கார்ந்து இருந்து நாட்காளி சூடு பிடித்தது போல திடீரென எழுந்து “நான் காபிக்கு குடிக்கல, நா ஒன்னுமே பண்ணல, சும்மாதா உட்கார்ந்தே“ அலறி அடித்துக் கொண்டு போக மொத்த குடும்பமே கோபியைப் பார்த்து சிரிக்கிறார்கள்.