எழிலின் வாழ்க்கைகாக கணேஷனை எச்சரிக்கும் பாக்யா... இருவருக்காகவும் எடுக்கப்போகும் முடிவு என்ன?
பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தாவின் கணவனின் மீள் வருகையால் சிக்கலில் இருக்கும் எழிலின் வாழ்க்கையை காப்பாற்ற போராடும் பாக்யாவின் காட்சிகள் ப்ரோமோவாக வெளியாகியுள்ளது.
பாக்கிலட்சுமி சீரியல்
பாக்கியலட்சுமி சீரியல் பிரபல தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் பாக்கியலட்சுமி. இது ஒரு இல்லத்தரசியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட தொடராகும்.
இந்த சீரியல் தொடருக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. அடுத்து என்ன நடக்கும் என்ற பரபரப்போடு நாளுக்கு நாள் சுவாரஸ்யம் குறையாமல் நகர்ந்துக் கொண்டிருக்கிறது இந்த தொடர்.
இந்தத் தொடரில் தற்போது பாக்யாவின் நிலைமை அதிரடி காட்டி வரும் பெண் போல காட்டி வருகிறார்கள். கணவனிடம் இருந்து விவாகரத்து பெற்ற பெண் ஒருவர் சந்திக்கும் சவால்களையும் அவர் கணவரை எதிர்த்து வெற்றி பெற்று கெத்து காட்டும் கதையாக காட்டி வருகிறார்கள்.
சிக்கலில் எழிலின் வாழ்க்கை
இந்நிலையில், பாக்யா அடுத்தடுத்து பல சிக்கல்களை சந்தித்து வருகின்ற நிலையில், இறந்து விட்டாதாக சொன்ன அமிர்தாவின் முதல் கணவன் மறுபடியும் வந்ததால் எழில் - அமிர்தாவின் வாழ்க்கை சிக்கலில் சிக்கியிருக்கிறது.
போனால் மனைவி, குழந்தையுடன் தான் போவேன் என அடம்பிடிக்கும் அமிர்தாவின் முன்னாள் கணவனிடம் பாக்யா நிலைமையை எடுத்து சொல்லி வழி கேட்டுக்கொண்டிருக்கிறார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |