கோபியாக மட்டுமல்ல வேற மாதிரியும் கூட நடிச்சு இருக்கேன்... சதீஷ் வெளியிட்ட வீடியோ!
நான் கோபியாக மட்டுமல்ல இப்படியும் நடித்திருக்கிறேன் என ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார் பாக்கியலட்சுமி கோபி.
பாக்கியலட்சுமி சீரியல்
பிரபல தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் பாக்கியலட்சுமி. இது ஒரு இல்லத்தரசியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட தொடராகும்.
இந்த சீரியல் தான் இப்போது டாப்பில் இருக்கிறது. இந்த சீரியலுக்கு பெருமளவான மக்கள் ஆதரவைக் கொடுத்து உச்சத்தில் வைத்திருக்கிறார்கள்.
இந்த சீரியலில் பாக்கியா, கோபி,ராதிகா என மூன்று கதாப்பாத்திரத்தை வைத்து அனைவரையும் பரபரப்பின் உச்சத்திற்கு கொண்டு சென்றுக் கொண்டிருக்கிறார்கள்.
கோபியின் மாறுவேடம்
சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் கோபி தினமும் சூட்டிங் ஸ்பாட்டில் நடக்கும் விடயங்களை தினம் தினம் வெளியிட்டிக் கொண்டிருப்பார்.
அப்படி இன்று வழக்கத்திற்கு மாறாக புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோவில் நான் கோபி மட்டுமல்ல இப்படியும் நடிச்சு இருக்கேன்... எப்புடி எனக் கேட்டு பதிவிட்டிருக்கிறார்.
அந்த வீடியோவைப் பார்த்த அனைவரையும் நீங்களா இது என கமெண்ட் செய்து வருகிறார்கள்.