ரூட்டை மாற்றிய கோபி: செல்வியுடன் ரொமான்ஸ் செய்யும் புகைப்படங்கள்
கோபிக்கு காப்பி கொடுப்பது போல ரொமான்ஸ் செய்யும் புகைப்படங்களை எடுத்து தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருக்கிறார் செல்வி.
பாக்கியலட்சுமி சீரியல்
பிரபல தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் பாக்கியலட்சுமி. இது ஒரு இல்லத்தரசியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட தொடராகும்.
இந்த சீரியல் தான் இப்போது டாப்பில் இருக்கிறது. இந்த சீரியலுக்கு பெருமளவான மக்கள் ஆதரவைக் கொடுத்து உச்சத்தில் வைத்திருக்கிறார்கள்.
இந்த சீரியலில் பாக்கியா, கோபி,ராதிகா என மூன்று கதாப்பாத்திரத்தை வைத்து அனைவரையும் பரபரப்பின் உச்சத்திற்கு கொண்டு சென்றுக் கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில், சமூக வலைதளங்களில் தற்போது கோபியின் புகைப்படம் வைரலாகி வருகிறது.
பாக்கியலட்சுமி சீரியலில் வீடு வேலைக்காரியாக நடித்து வரும் செல்வி கோபிக்கு காபி கொடுப்பதை போல ரொமென்ஸ் செய்து புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார்.
இந்தப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.