கோபிக்கு என்னாச்சு....! பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்த ட்டுவிஸ்டா? அதிர்ச்சியில் ரசிகர்கள்!
கோபி வெளியிட்ட புகைப்படத்தால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்து இருக்கிறார். அந்தப் புகைப்படம் ஒருவேளை கதையின் டுவிஸ்டாக இருக்குமா? என அதனை வைரலாக்கி வருகிறார்கள்.
பாக்கியலட்சுமி சீரியல்
பிரபல தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் பாக்கியலட்சுமி. இது ஒரு இல்லத்தரசியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட தொடராகும்.
இந்த சீரியல் தான் இப்போது டாப்பில் இருக்கிறது. இந்த சீரியலுக்கு பெருமளவான மக்கள் ஆதரவைக் கொடுத்து உச்சத்தில் வைத்திருக்கிறார்கள்.
இந்த சீரியலில் பாக்கியா, கோபி,ராதிகா என மூன்று கதாப்பாத்திரத்தை வைத்து அனைவரையும் பரபரப்பின் உச்சத்திற்கு கொண்டு சென்றுக் கொண்டிருக்கிறார்கள்.
வீல்சேரில் கோபி
சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் கோபி தினமும் சூட்டிங் ஸ்பாட்டில் நடக்கும் விடயங்களை தினம் தினம் வெளியிட்டிக் கொண்டிருப்பார்.
அந்தவகையில் நேற்று வெளியிட்ட புகைப்படம் ஒன்று அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. அந்தப் புகைப்படத்தில் கோபி வீல் சாரில் அமர்ந்துக் கொண்டு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார்.
இதனைப் பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு என்னாச்சி எனக் கேட்டுக் கொண்டிருந்த போது கோபி கூலாக "Just for fun" 'நான் நன்றாக தான் இருக்கிறேன்' என விளக்கம் கொடுத்திருக்கிறார்.