மலேசியாவில் பாக்கியலட்சுமிக்காக திரண்ட ரசிகர் கூட்டம்... அமோக வரவேற்பில் ஜொலித்த சுசித்ரா
பாக்கியலட்சுமி சீரியலில் பாக்யாவாக நடிக்கும் சுசித்ராவிற்கு மலேசியாவில் ஏராளமான ரசிகர்கள் கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் வைரலாகி வருகின்றது.
பாக்கிலட்சுமி பாக்யா
பாக்கியலட்சுமி பாக்யா பிரபல தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் பாக்கியலட்சுமி. இது ஒரு இல்லத்தரசியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட தொடராகும்.
இந்த சீரியல் தான் இப்போது டாப்பில் இருக்கிறது. இந்த சீரியலுக்கு பெருமளவான மக்கள் ஆதரவைக் கொடுத்து உச்சத்தில் வைத்திருக்கிறார்கள்
இந்த சீரியலில் முதன்மைக் கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் பாக்கியலட்சுமி கேரக்டரில் நடித்து வரும் சுசித்ரா ஷெட்டி தனது இயல்பான நடிப்பால் அனைவரையும் கவர்ந்திழுத்தவர்.
இவர் ஒரு கன்னட நடிகையாவார். பாக்கியலட்சுமி சீரியல் தான் இவருக்கு முதல் தமிழ் சீரியல். ஆனால் தமிழில் இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் சைவம் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த சீரியல் மூலம் அனைத்து இல்லத்தரசிகளின் மனதிலும் இடம் பிடித்து விட்டார்.
பாக்யாவிற்காக கூடிய கூட்டம்
இந்நிலையில், இந்தியாவில் பெரிதும் பிரபலமான பாக்யா தற்போது மலேசியா சென்ற வேளையில், அவருக்கு அங்கு மிகப் பெரிய கூட்டம் கூடியிருக்கிறது.
இவர் மலேசியாவிற்கு கடை திறப்பு விழா ஒன்றுக்கு சென்றிருந்த வேளையில் அவரைக் காண ஏராளமான ரசிகர்கள் கூடியவர்களின் புடைப்படங்கள் இணையத்தில் அதிகம் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |