Baakiyalakshmi: காவல்நிலையத்தில் இருந்து வெளியே வந்த கோபி... பாக்கியா மீது எழும்பிய வன்மம்
பாக்கியலட்சுமி சீரியலில் கோபி காவல்நிலையத்திலிருந்து வெளியே வந்த நிலையில், பாக்கியா மீது பயங்கர கோபத்தில் காணப்படுகின்றார்.
பாக்கியலட்சுமி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளது. நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பெண் கணவர் துணையில்லாமல் வாழ்ந்து காட்டும் கதையை கொண்டு செல்கின்றது.
புகுந்த வீட்டிற்கு மருமகளாக வந்து, பின்பு தனது பாசத்தினால் அனைவரையும் கவர்ந்து மகளாக மாறியுள்ள பாக்கியா பல பெண்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்கின்றார்.
சமீபத்தில் கோபியின் சதியினால் தனது ஹோட்டலில் மிகப்பெரிய பிரச்சனையை சந்தித்த பாக்கியா தற்போது அதிலிருந்து மீண்டு வந்துள்ளார்.
மேலும் தனது பிரச்சனைக்கு கோபி தான் காரணம் என்ற உண்மையையும் பாக்கியா கண்டுபிடித்துள்ளார். பின்பு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில் போலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார் கோபி.
தற்போது கோபியை செழியன் வெளியே அழைத்து வந்துள்ளார். வழக்கறிஞர் மூலமாக வெளியே வரவழைத்த நிலையில், சாப்பிட வாங்க என்று அழைத்துள்ளார்.
இதற்கு கோபி வரமறுத்துள்ள நிலையில், பாக்கியா மீது பயங்கர கோபத்தில் காணப்படுகின்றார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |