Baakiyalakshmi: மாமியாருக்காக குற்றவாளியாகிய பாக்கியா! சரமாரியாக திட்டி எச்சரித்த ராதிகா
பாக்கியலட்சுமி சீரியலில் மயூவை எதார்த்தமாக சந்தித்த பாக்கியாவை ராதிகா கடுமையாக எச்சரித்து சண்டை போட்டுள்ளார்.
பாக்கியலட்சுமி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களை அதிகமாக கவர்ந்து வருகின்றது. துரோகம் செய்யும் கணவருக்கு எதிராக சிங்கமாக வாழ்ந்து வரும் பெண்ணைக் குறித்த கதையாக இருக்கின்றது.
தவறு செய்த மகனுக்கு சப்போட்டாக இருந்த மாமியாரையும் எந்தவொரு தருணத்தில் விட்டுக் கொடுக்காமல் இருந்து அவருக்கு நல்ல மருமகளாக இருந்து வருகின்றார்.
சமீபத்தில் ராதிகாவின் குழந்தை கலைந்ததற்கு, ஈஸ்வரி தான் காரணம் என்று ராதிகாவும், அவரது அம்மாவும் குற்றம் சாட்டி ஜெயிலுக்கு அனுப்பினார்கள்.
இதனை மயூவை வைத்து தவிடுபொடியாக்கிய பாக்கியா, கடைசியாக மாமியாரையும் மீட்டு கொண்டு வந்துள்ளார்.
தற்போது வெளியாகியுள்ள ப்ரொமோ காட்சியில் ராதிகா சரமாரியாக பேசி பாக்கியாவை எச்சரிக்கின்றார். ராதிகா பேசியதற்கு எந்தவொரு கோபமும் கொள்ளாமல் பாக்கியா அமைதியாகவே இருக்கின்றார்.
மயூ பாக்கியாவின் பரிதாப நிலையினைக் கண்டு, ஒன்றும் பேச முடியாமல் தவித்து போய் நிற்கும் காட்சி வெளியாகியுள்ளது.