Baakiyalakshmi: கண்ணீர் மல்க கெஞ்சிய கோபி! மனமிறங்காத ஈஸ்வரி... மகளாக நின்ற பாக்கியா
பாக்கியலட்சுமி சீரியலில் யாரும் எதிர்பாராத சம்பவமாக ராமமூர்த்தியில் இறப்பு ஏற்பட்டுள்ள நிலையில், பாக்கியா அனைத்து இறுதி காரியத்தையும் செய்துள்ளார்.
பாக்கியலட்சுமி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் ஆயிரம் எபிசோட்டை தாண்டி சென்று கொண்டிருக்கின்றது. நடுத்தர குடும்ப பெண் புகுந்த வீட்டில் சந்திக்கும் பிரச்சனையை வைத்து எடுக்கப்பட்டுள்ளது.
எந்தவொரு பிரச்சனையாக இருந்தாலும் நின்று சமாளிக்கும் பாக்கியா தற்போது உடைந்து போயுள்ளார். ஏனெனில் இரவில் தன்னுடன் பேசிய மாமனார் காலையில் உயிருடன் இல்லை என்ற அதிர்ச்சி குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ராமமூர்த்தியின் இறப்பை அறிந்த கோபி வீட்டிற்கு வந்து இறுதி காரியத்தை செய்வதற்கு செல்லும் நேரத்தில், ஈஸ்வரி அவரைத் தடுத்துள்ளார்.
கோபி தனது அம்மாவிடம் கண்ணீர்விட்டு கெஞ்சியும் மனமிறங்காத ஈஸ்வரி பாக்கியாவை இறுதி காரியத்தை செய்ய கூறியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |