கொல்கத்தா மருத்துவ மாணவி மரணம்: அதிரடி முடிவு எடுத்த ஷ்ரேயா கோஷல்
கொல்கத்தாவில் பெண் டாக்டரை வன்கொடுமை செய்து கொலை செய்த விவகாரம் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் பாடகி ஷ்ரேயா கோஷல் கருத்து தெரிவித்துள்ளார்.
ஷ்ரேயா கோஷல்
பாடகி ஷ்ரேயா கோஷல் தமிழ் திரைப்படங்களில் தன் இனிமையான குரலால் பாடி பல ரசிகர்களை தன்வசப்படுத்தி வைத்துள்ளார்.
அந்த வகையில் தமிழில் முன்பே வா, நீதானே, மன்னிப்பாயா, வெளிச்சப்பூவே உள்ளிட்ட பல ஹிட் பாடல்களை பாடியுள்ளார்.
இந்த நிலையில் கொல்கத்தாவில் வரும் செப்டம்பர் 14ஆம் தேதி இவரது இசை நிகழ்ச்சி நடக்கவிருந்தது.
இதன்போது தான் கொல்கத்தாவில் பெண் டாக்டர் மௌமிதா வன்கொடுமை செய்து கொலை செய்த விவகாரம் அனைவரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இதனால் கொல்கத்தாவில் நடைபெறவிருந்த இசை நிகழ்ச்சியை ரத்து செய்திருப்பதாக பாடகி ஸ்ரேயா கோஷல் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை தனது சமூகவலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் பெண் டாக்டருக்கு ஏற்பட்ட சம்பவத்தால் உடலில் நடுக்கம் ஏற்பட்டது. இதயம் உடைந்து விட்டது. மிகுந்த வேதனை அடைந்தேன் என குறிப்பிட்டுள்ளார். மேலும் நான் உலக அளவில் பெண்களின் பாதுகாப்பிற்கு அர்ப்பணிப்பாக பிராத்தனை செய்கிறேன்.
இதுபோன்ற காரியங்களை செய்யும் அரக்கர்களை கண்டிக்க வேண்டும்.பெண்களின் கௌரவம், பாதுகாப்பு முக்கியம் என்றும், மனித இனத்தின் மிருகங்களுக்கு எதிராக ஒன்றுபடுவோம் என்று கூறியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |