பொசசிவ்னஸில் பழனிசாமியிடம் சண்டையிட்ட கோபி! அவ்வளவு பாசமா? இந்த விஷயம் ராதிகாவுக்கு தெரிஞ்சா?
இந்த வாரம் பாக்கியாவுடன் பழனிச்சாமி இருப்பதை கண்ட கோபி அவருடன் எல்லோரும் பார்க்க சண்டைக்கு சென்றுள்ளார்.
சவாலுக்காக கஷ்டப்படும் பாக்கியா
பிரபல தொலைக்காட்சியில் மிகவும் விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கும் தொடர்களில் ஒன்று தான் பாக்கியலட்சுமி.
கோபியும் ராதிகாவும் பாக்கியாவுடன் பாக்கியா வீட்டில் தங்கியிருப்பதால் அங்குள்ளவர்களுடன் ராதிகா சண்டையிட்டு கொண்டே இருக்கிறார்.
இதனால் கோபியும் நீண்ட நாட்களாக மன உளைச்சலில் இருந்து வருகிறார். இவர்களின் மோதல்கள் சமீபத்தில் முற்றிய நிலையில் பாக்கியா வீட்டிற்கான பணத்தை ஒரே மாதத்தில் திருப்பி தருவதாக சவால் விட்டுள்ளார்.
இந்த சவாலுக்காக 5000 பேர் வருகின்ற கல்யாண நிகழ்விற்கு சமைப்பதற்காக வந்துள்ளார். இவருக்கு மீறிய டாஸ்க் என்றாலும் அடுத்தடுத்து எபிசோட்கள் நகர்ந்து கொண்டே இருக்கின்றது.
வந்த இடத்தில் பழனியுடன் சண்டைக்கு போகும் கோபி
இந்த நிலையில் கல்யாணத்திற்கு பாக்கியாவுடன் பழனிச்சாமியும் வந்திருப்பதால் எங்க பாக்கியா - பழனியுடன் இணைந்து விடுவாரோ என்ற பயத்தில் கோபி அங்குமிங்கும் புலம்பி கொண்டு இருக்கிறார்.
பாண்டிச்சேரியில் இருக்கும் பாக்கியா பழனிச்சாமியுடன் பேசிக் கொண்டிருப்பதை கோபி கண்டுவிட்டு “ பாக்கியாவுடன் நீங்க ஏன் பேசுறீங்க..” என வாக்குவாதம் காரசாரமாக சென்றுக் கொண்டிருக்கின்றது.
இவ்வாறு பாக்கியாவிற்காக கோபி சண்டையிடுவது ராதிகாவிற்கு தெரிந்தால் கோபியின் கதை அவ்வளவு தான் என ரசிகர்கள் முனுமுனுத்து வருகிறார்கள்.
அந்த வகையில் இந்த வாரத்திற்கான ப்ரோமோவில் கோபியின் பொசசிவ்னஸை அழகாக காட்டியிருக்கிறார்கள்.