பயங்கர வன்மத்தில் மீண்டும் பாக்கியாவின் வீட்டிற்குள் நுழையும் ராதிகா! இனி நடக்க போவது என்ன?
வெளியில் சென்ற ராதிகா பொலிஸாரின் உதவியுடன் மீண்டும் பாக்கியாவின் வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.
பாக்கியலட்சுமி சீரியல்
பிரபல தொலைக்காட்சியில் மிகவும் பரபரப்பாகச் சென்றுக் கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று தான் பாக்கியலட்சுமி.
இந்த சீரியலில் ஆரம்பத்திலிருந்து பாக்கியாவிற்கு நல்ல வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் இருக்கின்றது.
மேலும் பாக்கியா தான் இந்த சீரியலின் கதாநாயகி என்பதால் இவரின் ட்ரோலுக்கு தனி மரியாதையும் இருந்து வருகின்றது.
தன்னுடைய கணவர் இரண்டாவது திருமணம் செய்தாலும் அவரை எதுவும் கூறாமல் அவர் போக்கில் விட்டு தன்னுடைய வேலைகளை சரியாக பார்க்கும் பாக்கியாவின் தைரியம் இல்லத்தரசிகளின் இதயங்களை வென்றுள்ளது.
பொலிஸாரின் உதவியுடன் நுழையும் ராதிகா
இந்த நிலையில் ராதிகாவை வீட்டில் இருக்க வேண்டாம் எனக் கூறி பாட்டியில் வீட்டை விட்டு வெளியில் அனுப்பியுள்ளார்.
கோபி வரும் வரையில் வீட்டிற்குள் வெளியில் நின்று கொண்டிருந்த ராதிகா அவரின் அம்மாவிற்கு கூறி பொலிஸாரை வரவழைத்துள்ளார்.
கோபியுடன் சட்டப்படி மனைவியாக ராதிகா இருப்பதால் அவரை மீண்டும் பாக்கியாவின் வீட்டிற்காக செல்ல அனுமதித்துள்ளார்கள்.
இந்த காட்சியை பார்த்த ரசிகர்கள், இனி பாக்கியாவிற்கும் ராதிகாவிற்கும் இடையிலான சண்டைகள் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கிறார்கள்.