நான் வேணாம் என தூக்கி போட்ட வாழ்க்கை தான் கோபி! ராதிகாவிற்கு செருப்பால் அடித்தாற் போல் பதிலடி கொடுத்த பாக்கியா
பாக்கியலட்சுமி சீரியலில் கோபி காரணமாக வைத்து பாக்கியாவை அசிங்கப்படுத்திய ராதிகாவிற்கு சரியான பதிலடி கிடைத்துள்ளது.
குடித்து விட்டு நடுரோட்டில் கோபி
பிரபல தொலைக்காட்சியில் டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தை பிடித்துள்ளது சீரியல் தான் பாக்கியலட்சுமி.
இந்த சீரியலில் கோபி பாக்கியாவை விட்டு விட்டு ராதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இவர்கள் திருமணத்திற்கு பிறகு கொஞ்ச நாட்கள் வரை சந்தோசமாக இருந்து வந்தார்கள்.
பின்னர் சிறு சிறு பிரச்சினைகளாக துவங்கிய சண்டை பாரியளவாக உருவெடுத்துள்ளது. மேலும் பாக்கியா ராதிகாவின் கம்பனியின் கேண்டின் செய்வதால் ராதிகா அடுத்தடுத்து கஷ்டமான டாஸ்க்களை பாக்கியாவிற்கு கொடுத்து வருகிறார்.
இதனை சரியாக செய்வதற்கு பழனிச்சாமி துணையாக இருந்து வருகிறார்.
மீண்டும் பாக்கியாவுடன் இணையும் கோபி
இந்த நிலையில் பாக்கியாவுடன் இருக்கும் போது குடிக்காத கோபி, ராதிகாவுடன் தினமும் குடித்து சண்டை பிடிக்கிறார்கள். இதற்கு ராதிகா தான் காரணம் எனவும் அடிக்கடி கூறுகிறார்கள்.
இதனை தொடர்ந்து ராதிகா கோபியுடன் வாழ முடியாது என வீட்டை விட்டு செல்வதற்காக கிழம்பும் போது கோபி ராதிகாவுடம் இனி இல்லை என்ற அளவிற்கு கெஞ்சிகிறார். ஆனாலும் இதனை எல்லாம் மதிக்காமல் நடுரோட்டில் நின்று ராதிகா சண்டை போடுகிறார்.
இந்த சண்டையை நடுரோட்டிலுள்ளவர்கள் அனைவரும் பார்கிறார்கள். இதனை பாக்கியாவின் அத்தையும் பார்க்கிறார். இதனால் கோபியை ராதிகாவை விட்டு மீண்டும் வீட்டிற்கு வரும் படி அழைக்கிறார்.
இதற்கு என்ன பதில் கூறுவது என தெரியாமல் கோபியும் தயங்குகிறார். இவற்றை ராதிகா கோயிலுக்கு ஒரு பக்கமாக மறைந்திருந்து பார்கிறார்.