படிக்கிற வயதில் இது தேவையா? காதல் பாடலுக்கு ரீல்ஸ் வெளியிட்ட கோபியின் மகள்! கொட்டிதீர்க்கும் ரசிகர்கள்
விஜய் பட பாடலுக்கு கியூட் ரியாக்ஷன் கொடுக்கும் கோபியின் மகளின் வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பாக்கியலட்சுமி சீரியல்
பிரபல தொலைக்காட்சியில் பாக்கியலட்சுமி சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன.
ஆரம்பத்தில் இந்த சீரியல் சாதாரண நிலைமையில் தான் ஓடிக் கொண்டிருந்தது, கோபியின் இரண்டாவது திருமணத்தின் போது தான் மக்களிடையே டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தை பிடித்துள்ளது.
இதன்படி, பாக்கியாவை விவாகரத்து செய்த கோபி ஒரு பெண் குழந்தையுடன் இருக்கும் ராதிகாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.
இவர்களின் திருமணத்தை கோபியின் வீட்டிலுள்ளவர்கள் ஏற்றுக் கொள்ளாத போது ராதிகா பொலிஸின் ஆதரவுடன் கோபியின் வீட்டில் இருந்து வருகிறார்கள்.
இனியா ராதிகாவுடன் அப்பா கோபி சேர்ந்து விடக் கூடாது என நினைத்து சில வேலைகளை பார்த்து வருகிறார்.
படிக்கிற வயதில் இது தேவையா?
இந்த நிலையில் சீரியல் ஒரு பக்கம் விறுப்பாக ஓடிக் கொண்டிருந்தாலும் கோபியின் ஆசை மகளாக நடிக்கும் இனியா அவரின் சமூக வலைத்தளப்பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
அந்த வகையில் தளபதி விஜயின் பாடலுக்கு கையில் செல்போனுடன் கியுட் ரியாக்ஷன் கொடுத்து ரீல்ஸ் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதில் அவரின் ரியாக்ஷன் பார்க்கும் போது நேஹா காலப்போக்கில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதனை பார்த்த ரசிகர்கள் “படிக்கிற வயதில் இப்படியா?” என கலாய்க்கும் வகையில் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.