Baakiyalakshmi: செழியனை சரமாரியாக புரட்டி எடுத்த ஜெனியின் தந்தை! பரபரப்பான ப்ரொமோ காட்சி
பாக்கியலட்சுமி சீரியலில் ஜெனியின் தந்தை செழியனை சரமாரியாக அடித்து துரத்திய காட்சி ப்ரொமோவாக வெளியாகியுள்ளது.
பாக்கியலட்சுமி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கிலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், டிஆர்பி-யிலும் முன்னணியில் இருந்து வருகின்றது.
பாக்கியாவை வேண்டாம் என்று விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை திருமணம் செய்து தனியாக இருந்து வந்த நிலையில் தற்போது பாக்கியாவின் வீட்டிற்கே வந்து வசித்து வருகின்றார்.
ராதிகா பாக்கியாவிற்கு ஆறுதலாக இருந்து வந்த நிலையில் தற்போது எதிரியாக மாறி வருவதுடன், கோபிக்கு தனியாக உணவகம் ஒன்றினை வைத்து கொடுத்துள்ளார். இதனால் பாக்கியாவின் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கோபியை அவதானித்த ஜெனியின் தந்தை அவருக்கு திருமண ஏற்பாடு செய்வதாக கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கோபி வீட்டில் உள்ளவர்களிடம் கூறியுள்ளார்.
உடனே செழியன் ஜெனியின் வீட்டிற்கு சென்று அவரிடம் பேச முயன்ற போது, ஜெனியின் தந்தை செழியனை சரமாரியாக தாக்கி வெளியே தள்ளியுள்ளார்.