இன்றோடு முடிவுக்கு வந்த பாக்கியலட்சுமி: வைரலாகும் இனியாவின் எமோஷ்னல் பதிவு
பாக்கியலட்சுமி சீரியல் இனியா-ஆகாஷ் திருமணத்தோடு சிறப்பான முடிவுக்கு வந்த நிலையில், இறுதி நாள் படப்பிடிப்பு குறித்து இனியா பகிர்ந்துள்ள எமோஷ்னல் விடயங்கள் மற்றும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றர்.
பாக்கியலட்சுமி
விஜய் தொலைக்காட்சியில் 6 ஆறு வருடங்களாக 1000 எப்பிசோடுகளை கடந்து வெற்றியின் உச்சமாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் பாக்கியலட்சுமி.
ஸ்ரீமோயி என்ற சீரியலின் ரீமேக்காக தான் பாக்கியலட்சுமி சீரியல் ஒளிபரப்பானது. இதில் சுசித்ரா என்ற புதுமுக நடிகை முக்கிய நாயகியாக நடிக்க நாம் பார்த்து பழக்கப்பட்ட சில நடிகர்களும் நடித்திருந்தனர்.
தனது குடும்பத்தினராலேயே அசிங்கப்படுத்தப்பட்ட பாக்கியா என்ற பெண் எப்படி தனது வாழ்க்கையில் போராடி வெற்றிப் பெற்றார் என்பதை கருப்பொருளாக கொண்ட இந்த சீரியல் நகர்த்தப்பட்டது.
இந்நிலையில் இன்றைய தினம் இனியா-ஆகாஷ் திருமணத்தோடு பாக்கியலட்சுமி சீரியல் இனிதே முடிவுக்கு வந்தது. சீரியலின் முக்கிய கதாபாத்திரங்கள் தங்களது வாழ்க்கையில் ஏற்பட்ட விஷயங்களை வைத்து தங்கள் கருத்துக்களை பகிர்ந்துக்கொள்வதுடன் இந்த தொடர் முடிவுக்கு வருகிறது.
இனியாவின் பதிவு
இந்நிலையில் இனியா கதாப்பாத்திரத்தில் நடித்த நேகா தனது சமூக வலைத்தளப்பக்க்தில் உருக்கமாக பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், நமது உண்மையான ஹீரோக்கள், நமது தொழில்நுட்ப வல்லுநர்கள். எங்கள் இயக்குனர், ஒளிப்பதிவாளர்கள், உதவி இயக்குநர்கள், கேமரா உதவியாளர்கள், லைட் மேன்கள், ஒப்பனை மற்றும் சிகை அலங்காரக் குழு, தயாரிப்புக் குழு, பிரேம்களுக்குப் பின்னால், ஒவ்வொரு சரியான ஷாட்டுக்குப் பின்னால் உள்ளவர்கள்.
இவர்களை மக்கள் பார்ப்பதில்லை ஆனால் இவர்கள் தான் இந்த சீரியில் வெற்றிக்கு காரணமானவர்கள். இவர்கள் கடினமான சூழ்நிலைகளையும் எளிமையாக கடப்பதற்கு எனக்கு உதவியவர்கள். இனியா உங்க எல்லாரையும் மிஸ் பண்ணுவா என குறிப்பிட்டு இறுதி படப்பின் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
