பள்ளியிலிருந்து இனியாவிற்கு வந்த போன் கால்... சதியை முறியடிப்பாரா பாக்கியா?
பாக்கியலட்சுமி சீரியலில் இனியா 12ம் வகுப்பு தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்துள்ளதால் பள்ளியிலிருந்து அவரை அழைத்துள்ளனர்.
பாக்கியலட்சுமி சீரியல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கிலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், டிஆர்பி-யிலும் முன்னனியில் இருந்து வருகின்றது.
பாக்யாவை வேண்டாம் என்று அவரை விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை திருமணம் செய்து ஒரே வீட்டில் வசித்து வருகின்றார். இதில் ராதிகாவிற்கும் கோபியின் அம்மாவிற்கும் இடையே நடக்கும் சண்டையால் பாக்கியா விடாமுயற்சி செய்து வீட்டை தன்வசப்படுத்தியுள்ளார்.
நேற்றைய எபிசோடில் பாக்கியாவிற்கு வீட்டை எழுதி கொடுக்க பத்திர பதிவு அலுவலகத்திற்கு வந்தவரை, எழில் எச்சரித்து அனுப்பினார். பின்பு வீட்டிற்கு பெயர்பலகையையும் வைத்து கோபியை கடுப்பேற்றியுள்ளார் எழில்.
இந்நிலையில் பயங்கர கோபத்தில் கோபி காணப்படுகின்றார். இனியா 12ம் வகுப்பு தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்து பள்ளியிலேயே முதலாம் மாணவியாக வந்துள்ளார்.
இதனால் பள்ளி ஆசிரியர் போன் சயெ்து வாழ்த்து தெரிவித்ததுடன், இனியாவை பள்ளிக்கு வரக்கூறியுள்ளனர். ஆனால் பாக்கியாவிற்கு செல்போன் அழைப்பு எதுவும் வராமல் டவர் சதி செய்கின்றது.
வேலை பார்க்கும் இடத்தில் ஒரே பதட்டத்துடன் இருப்பதுடன், போன் செய்து இனியாவிடம் பேசுவதற்கு பல வழிகளில் முயற்சித்து வருகின்றார். இனியாவின் எதிர்பார்ப்பிற்கு செல்வாரா பாக்கியா? செல்போன் டவர் செய்யும் சதியிலிருந்து வெளிவருவாரா? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
நேற்று வெளியான புகைப்படத்தில் இனியா அருகில் ராதிகா நின்றுள்ளது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.