Baakiyalakshmi: காதலனுடன் ஹோட்டலில் இனியா செய்த காரியம்... பேரதிர்ச்சியில் நின்ற செல்வி
பாக்கியலட்சுமி சீரியலில் இனியாவின் காதல் கோபிக்கு தெரியவரவே குடும்பத்தினர் செல்வியை வீட்டை விட்டு துரத்தியுள்ளனர்.
பாக்கியலட்சுமி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகியுள்ள இந்த சீரியலை ஆண்களும் அவதானித்து வருகின்றனர்.
நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பெண் கணவர் இல்லாமல் தனது கடமைகளை செய்து பிள்ளைகளை வளர்க்கும் காட்சியாகும்.
இதற்கிடையே கணவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ள பெண், பாக்கியாவின் தோழியாகவும் கதை ஆரம்பிக்கப்பட்டது.
தற்போது இரண்டாவது திருமண வாழ்க்கையும் விவாகரத்து ஆன நிலையில், கோபி பாக்கியா வீட்டில் இருந்து வருகின்றார். இதனிடையே பாக்கியாவும் தனது தொழிலில் முன்னேறிச் செல்கின்றார்.
இதனிடையே இனியாவின் காதல் கோபிக்கு தெரியவந்துள்ளது. உடனே வீட்டில் உள்ள அனைவரிடமும் அம்பலப்படுத்தியுள்ளார்.
அத்தருணத்தில் விடயம் அறியாத செல்வி வீட்டிற்கு வரவே வீட்டில் உள்ள அனைவரும் செல்வியை வெளியே செல்லுமாறு துரத்தியுள்ளனர்.
ஆனால் பாக்கியா செல்வியை எதுவும் கூறாமல் இருக்கும் நிலையில், அவர் செல்வியை உறவாக நினைத்து குறித்த காதலுக்கு சம்மதம் கூறுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |