புடவையில் சாதுவாக இருக்கும் பாக்கியாவா இது? மாடர்ன் உடையில் கலக்கல் ஹேர்ஸடைல பாருங்க
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்கும் பாக்கியா அட்டகாசமான ஹேர்ஸ்டைலுடன் அளவான மேக்கப்புடன் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகின்றது.
பாக்கியலட்சுமி சீரியல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகின்றது. இந்த சீரியலில் மனைவிக்கு தெரியாமல் தனது காதலியுடன் பழகி வந்த கோபி அவரையே திருமணமும் செய்து கொண்டு வாழ்ந்து வருகின்றார்.
குடும்ப பெண்கள் படும் கஷ்டம் அவர்கள் அதனை எவ்வாறு கையாள வேண்டும் என்பதை மிகவும் அழகாக காட்டியுள்ளது இந்த சீரியல்.
சீரியலில் நடிகை சுசித்ரா பாக்கியா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நிலையில், இவருக்கே மக்களின் வரவேற்பு அதிகமாக கிடைத்துள்ளது.
அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிட்டு வரும் பாக்கிய சில தினங்களுக்கு முன்பு ஸ்டைலான முடி அலங்காரத்துடன், அளவான மேக்கப்புடன் காணப்படும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.
இதனை அவதானித்த ரசிகர்கள் அவரின் அழகையும், அவரது நடிப்பையும் பாராட்டி கருத்துக்களை குவித்து வருகின்றனர்.