Baakiyalakshmi: பாக்கியாவின் ஹோட்டலுக்கு வந்த புது பிரச்சனை... நேருக்கு நேர் சவால் விட்ட வில்லன்
பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியாவின் ஹோட்டலை சுதாகர் என்ற தொழிலதிபர் விலைக்கு கேட்டு பிரச்சனை செய்து வருகின்றார்.
பாக்கியலட்சுமி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகியுள்ள இந்த சீரியலை ஆண்களும் அவதானித்து வருகின்றனர்.
நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பெண் கணவர் இல்லாமல் தனது கடமைகளை செய்து பிள்ளைகளை வளர்க்கும் காட்சியாகும்.
சில தினங்களுக்கு முன்பு இனியாவின் காதல் பிரச்சனை வீட்டில் பூதாகரமாக வெடித்த நிலையில், இதனால் கோபியும், அம்மா ஈஸ்வரியும் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
மூன்று மாதத்திற்கு பின்பு என்று கதையில் ஒரு திருப்பத்தை கொண்டு வந்துள்ளனர். இதில் இனியா படித்து முடித்து வேலைக்கு செல்வதற்கு தயாராகியுள்ளார்.
மிகவும் நன்றாக சென்று கொண்டிருந்த பாக்கியாவின் ஹோட்டலைக் கேட்டு சுதாகர் என்ற தொழிலதிபர் குடைச்சல் கொடுக்கின்றார். ஆனால் பாக்கியா கம்பீரமாக தனது ஹோட்டலை தரமுடியாது என்று கூறியுள்ளார்.
ஆனால் சுதாகர் பாக்கியாவின் ஹோட்டலை வாங்குவதற்கு கோபியினை அழைத்து திட்டம் தீட்டவுள்ளார். இந்த பிரச்சனையிலிருந்து பாக்கியா எவ்வாறு மீள்கின்றார் என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |