சீரியலை விட்டு விலகுகிறாரா கோபி? பாக்கியாவை அசிங்கப்படுத்த நினைத்தவருக்கு நடந்தது என்ன?
பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியாவை கைது செய்யப்படும் இறுதி நொடியில் பழனிச்சாமி அவரை காப்பாற்றிய காட்சி ரசிகர்களை கவர்ந்துள்ளது.
பாக்கியலட்சுமி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கிலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், டிஆர்பி-யிலும் முன்னனியில் இருந்து வருகின்றது.
பாக்யாவை வேண்டாம் என்று அவரை விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை திருமணம் செய்து ஒரே வீட்டில் வசித்து வந்த கோபி பாக்கியாவின் சவாலில் தோல்வியடைந்து வீட்டை விட்டு வெளியேறினார்.
இனியா சேர்ந்த கல்லூரியில் பாக்கியாவும் கல்லூரியில் சேர்ந்துள்ள நிலையில், தற்போது இனியாவை படிப்பு விடயமாக சுற்றுலா அழைத்துச் சென்றுள்ளார் பாக்கியா.
கடவுளாக உதவிய பழனிச்சாமி
அங்கு வரும் சிக்கல்களை சாமர்த்தியமாக சமாளித்த பாக்கியா, தற்போது தனது காரில் வரும் போது சிறிய விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் பாக்கியாவின் லைசென்ஸை பொலிசார் கேட்கின்றனர்.
ஹொட்டலில் இருக்கும் போது பர்ஸ் தொலைந்துவிட்டதால், அதிலிருந்த லைசென்ஸ் தொலைந்துள்ளது. இதனால் வீட்டிலிருக்கும் லைசென்ஸை எடுப்பதற்கு பாக்கியா கூறியநிலையில், அதற்குள் கோபி தன்னுடைய கையில் இருந்த மற்றொரு சாவியை கொண்டு அதனை திறந்து எடுத்துவிடுகின்றார்.
பின்பு பாக்கியா நடுரோட்டில் தவித்துக் கொண்டிருக்கையில், இறுதியாக கைது செய்யப்பட்டு ஜீப்பில் ஏறச் சென்றுள்ளார். அப்பொழுது பழனிச்சாமியிடமிருந்து லைசென்ஸின் புகைப்படம் வந்துள்ளது.
அதாவது பழனிச்சாமி ஹொட்டல் ஒன்றிற்கு சென்ற போது அங்கு கோபி தனது நண்பருடன் சென்று பாக்கியாவை குறித்தும், லைசென்ஸ் குறித்தும் பேசியதை கேட்டுள்ளார். மேலும் கையிலிருந்த லைசென்ஸை மடக்கி கீழே போட்டுவிட்டு சென்றதை பழனிச்சாமி எடுத்து அனுப்பியுள்ளார்.
இவ்வாறு சீரியலில் பயங்கர வில்லனாக இருக்கும் கோபி தற்போது காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளார். இதில் அவர் மிகவும் சோகமாக பேசியதுடன், குறித்த சீரியலிலிருந்து வெளியேறுவது போன்றும் பேசியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |