பாக்கியா வீட்டு முன்னாடி குத்த வச்சு உட்கார்ந்திருக்கும் கோபி.. புலம்பலின் உச்சம்!
பாக்கியா வீட்டு முன்னாள் குத்த வச்சு அமர்ந்திருக்கும் கோபியின் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பாக்கியலட்சுமி
பிரபல தொலைக்காட்சியில் 1000 எபிசோடை கடந்து ஓடி கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி.
இந்த சீரியலில் நடிக்கும் கதாபாத்திரங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவிட்டதால் இன்று வரை சுவாரஸ்யமாக சென்றுக் கொண்டிருக்கின்றது.
அந்த வகையில், தற்போது பாக்கியா - கோபியின் கதை முடிந்து ராதிகா - கோபியின் கதை ஆரம்பமாகியுள்ளது.
கர்ப்பமாக இருந்த ராதிகா தவறி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ராதிகாவால் தெருவுக்கு வந்த கோபி
இந்த நிலையில் ராதிகாவை ஈஸ்வரி தள்ளி விட்டார் என ராதிகா அம்மா கோபியிடம் கூறுகிறார். அவரும் அதனை நம்பிக் கொண்டு ஈஸ்வரியிடம் மிகக் கடுமையாக நடந்து கொள்கிறார்.
இப்படி சீரியல் விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கையில், கோபி அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படு ஆர்வமாக இருந்து வருகிறார். என்ன நடந்தாலும் தினமும் காலையில் ஒரு பதிவு போட்டு விடுவார்.
அந்த வகையில், பாக்கியா வீட்டு வாசலில் குத்த வச்சு அமர்ந்திருப்பது போன்ற புகைப்படமொன்றை பகிர்ந்துள்ளார்.
புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், “ கோபிக்கு இப்படியொரு நிலைமையா?” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
மேலும் ராதிகாவை திருமணம் செய்து வசமாக சிக்கிக் கொண்டது போல் கோபி தொடர்ந்து காணொளிகளை பகிர்ந்து வருகிறார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |