பாக்கியலட்சுமி கோபியை அழிக்க நினைக்கும் கூட்டம்... உருக்கமான பதிவை பதிவிட்ட சதீஷ்
பாக்கியலட்சுமி சீரியலில் கோபியாக நடித்து வரும் சதீஷ் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவொன்றை பதிவிட்டிருக்கிறார்.
பாக்கியலட்சுமி சீரியல்
பிரபல தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் பாக்கியலட்சுமி. இது ஒரு இல்லத்தரசியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட தொடராகும்.
இந்த சீரியல் தான் இப்போது டாப்பில் இருக்கிறது. இந்த சீரியலுக்கு பெருமளவான மக்கள் ஆதரவைக் கொடுத்து உச்சத்தில் வைத்திருக்கிறார்கள். இந்த சீரியலில் பாக்கியா, கோபி,ராதிகா என மூன்று கதாப்பாத்திரத்தை வைத்து அனைவரையும் பரபரப்பின் உச்சத்திற்கு கொண்டு சென்றுக் கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில், சமூக வலைதளங்களில் தற்போது கோபியின் உருக்கமான வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் அவர் நடித்த மலையாள சீரியல் வீடியோ ஒன்றை குறிப்பிட்டு பதிவொன்றை வெளியிட்டிருக்கிறார்.
அந்த வீடியோவில், “நான் மிகவும் ஆசையுடனும் பெரும் எதிர்பார்ப்புடன் நடித்து ஒத்துக் கொண்ட ரோல். ஆனால் எதிர்பார்ப்புகள் பெரும் ஏமாற்றத்தில் தான் முடியும் என்பதை வாழ்க்கை எனக்கு மீண்டும் முடியும் கற்பித்தது. நாம் என்னதான் சிறப்பாக செய்தாலும் அதை அழிப்பதற்கு சில பேர் காத்துக் கொண்டிருப்பார்கள். நண்பர்களே இது தான் உண்மை வாழ்க்கை தத்துவம்” என்று அந்த பதிவில் உருக்கமாக பதிவிட்டிருக்கிறார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |