பாக்கியலட்சுமி கோபியின் ரியல் மருமகளை பார்த்துருக்கீங்களா? இவரும் ஒரு நடிகை தானாம்
பாக்கியலட்சுமி கோபி அவருடைய அக்கா மகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து அவருக்கு வாழ்த்துக் கூறியுள்ளார்.
பாக்கியலட்சுமி
பிரபல தொலைக்காட்சியில் கடந்த 5 வருடங்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி.
இந்த சீரியல், திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.
அதில், நடிகை சுசித்ரா பாக்கியலட்சுமி என்ற லீட் ரோலில் நடித்து வருகிறார். அவருடன் இணைந்து வேலு லட்சுமணன், சதிஷ், நேகா மேனன், ரேஷ்மா பசுபுலேட்டி ஆகியோர் நடித்து வந்தனர்.
இந்த நிலையில், பாக்கியாவை விவாகரத்து செய்து விட்டு கோபி அவருடைய நண்பியான ராதிகாவை மறுமணம் செய்தார். ஆனால் அந்த வாழ்க்கையும் நீண்ட நாட்கள் நிலைக்கவில்லை. தற்போது ராதிகாவையும் விவாகரத்து செய்து விட்டு அவருடைய அம்மாவுடன் பாக்கியா வீட்டில் இருந்து வருகிறார்.
இனியாவின் காதலை எதிர்த்து, சுதாகர் மகனுக்கு திருமணம் செய்து வைத்துவிட்டார். கடந்த சில நாட்களாக சுதாகர் பாக்கியாவிற்கு தொல்லை கொடுத்து வருவதால் அது பற்றி விசாரிப்பதற்காக கோபி அவரின் சம்பந்தியான சுதாகர் வீட்டிற்கே செல்கிறார்.
ரியல் மருமகள் யார் தெரியுமா?
இப்படி சீரியல் ஒரு பக்கம் சென்றுக் கொண்டிருக்கும் பொழுது, கோபி எனப்படும் சதிஷ் அவருடைய சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
அந்த வகையில், தினமும் ஒரு பதிவை பகிரும் கோபி, அவருடைய அக்கா மகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து அவரின் முயற்சிக்கான வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
புகைப்படத்தை பார்த்த சின்னத்திரை ரசிகர்கள், “இவர் தான் உங்களின் ரியல் மருமகளா?” எனக் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
