Baakiyalakshmi: மாரடைப்பினால் மருத்துவமனையில் கோபி... இனியாவிற்கு கொடுக்கும் நெருக்கடி
பாக்கியலட்சுமி சீரியலில் சுதாகர் தனது மகனுக்கு இனியாவை திருமணம் செய்து வைப்பதற்கு நெருக்கடி கொடுக்கும் நிலையில், கோபி மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
பாக்கியலட்சுமி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகியுள்ள இந்த சீரியலை ஆண்களும் அவதானித்து வருகின்றனர்.
நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பெண் கணவர் இல்லாமல் தனது கடமைகளை செய்து பிள்ளைகளை வளர்க்கும் காட்சியாகும்.
இனியாவின் காதல் பிரச்சனையால் கோபி மற்றும் ஈஸ்வரி இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி வாழ்ந்து வருகின்றனர்.
மூன்று மாதத்திற்கு பின்பு என்று கதையில் ஒரு திருப்பத்தை கொண்டு வந்துள்ளனர். இதில் இனியா படித்து முடித்து வேலைக்கு செல்கின்றார்.
இனியாவை பெண் கேட்டு சுதாகர் வீட்டிற்கு வந்துள்ளார். இவர் ஏற்கனவே பாக்கியாவிடம் ஹோட்டலைக் கேட்டு மிரட்டியவர் ஆவார்.
இன்னும் சில வாரத்தில் திருமணம் வைப்பதற்கு நெருக்கடி கொடுத்த நிலையில், பாக்கியா மறுப்பு தெரிவித்து வருகின்றார். ஆனால் அதற்குள் கோபி மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், இனியாவிடம் திருமணத்திற்கு சம்மதம் வாங்கியுள்ளார்.
ஆனால் பாக்கியாவிற்கு கோபிக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது என்று கூறுவது நடிப்பு என்று கூறுவதுடன், கோபி மீது சந்தேகமும் எழுந்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |