Baakiyalakshmi: பாக்கியாவின் செயலால் பொறாமையில் பொங்கிய கோபி
பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியாவின் செயலால் கோபி பொறாமையில் பொங்கி எழுந்துள்ளார்.
பாக்கியலட்சுமி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கிலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், டிஆர்பி-யிலும் முன்னணியில் இருந்து வருகின்றது.
பாக்கியாவை வேண்டாம் என்று விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை திருமணம் செய்து தனியாக இருந்து வந்த நிலையில் தற்போது பாக்கியாவின் வீட்டிற்கே வந்து வசித்து வருகின்றார்.
ஜெனிபர் மற்றும் செழியன் இருவரையும் பாக்கியா ஒன்று சேர்த்து வைத்துள்ளார். இதனால் கோபி பாக்கியா மீது பொறாமையாக இருக்கின்றார்.
ராதிகாவின் கேள்வி
ராதிகா பாக்கியா இருவரும் சமையலறையில் இருக்கும் போது, ஈஸ்வரி செழியனைக் குறித்து பேசிவிட்டு செல்கின்றார்.
இதனை கேட்டுக்கொண்டிருந்த ராதிகா பாக்கியாவிடம் கோபம் வரலையா என்று கேட்கின்றார். அதற்கு பாக்கிய நம்ம அத்தை தானே... என்று கூறியுள்ளார்.
இதற்கு ராதிகா என்னது நம்ம அத்தையா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். ஒருவழியாக செழியன் ஜெனி இருவரின் வாழ்க்கை சரியான நிலையில், அடுத்து பாக்கியாவின் பிஸ்னஸில் அடி விழுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |