கோபிக்கு வழக்கப்பட்ட விருது! ராதிகாவிற்கு ஏற்பட்ட அவமானம்: கெத்தாக நின்ற பாக்கியா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்கும் கோபி மனவேதனையுடன் காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
பாக்கியலட்சுமி சீரியல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகின்றது. இந்த சீரியலில் மனைவிக்கு தெரியாமல் தனது காதலியுடன் கணவர் தொடர்பு வைத்துள்ளதாக எடுக்கப்பட்டுள்ளது.
பாக்கியாவிற்கு கோபி செய்யும் துரோகத்தால் ரசிகர்கள் அவரைத் திட்டித் தீர்த்து வருகின்றனர். அதிலும் தற்போது ராதிகாவை திருமணம் செய்து கொண்டதை அவதானித்த ரசிகர்கள் மேலும் கடுப்பில் இருந்து வருகின்றனர்.
ராதிகாவிற்கு ஏற்பட்ட அவமானம்
தற்போது பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் சேர்ந்து சுற்றுலா சென்றுள்ள நிலையில், அங்கு கோபியும் தனது புது மனைவி ராதிகாவை அழைத்துக் கொண்டு, அதே இடத்திற்கு சென்றுள்ளார்.
அங்கு பலவிதமான பிரச்சினைகளை சந்தித்துள்ள நிலையில், ராதிகாவும் கோபத்தில் இருந்து வருகின்றார். ராதிகாவின் கோபத்தினை சமாளிக்க முடியாமல் தவிக்கும் கோபி மீண்டும் மீண்டும் சிக்கலை சந்திக்கின்றார்.
கோபி அலுவலகத்தில் அவருக்கு விருது கொடுக்கையில் மனைவி என்று கூறி பாக்கியலட்சுமி அழைத்துச் சென்றுள்ள நிலையில், எழுந்து நின்று அவமானப்பட்டுள்ளார்.