Baakiyalakshmi: நாங்க செத்தா கூட வந்து பார்க்கக்கூடாது.... கோபியை வெறுத்து ஒதுக்கிய குடும்பம்
பாக்கியலட்சுமி சீரியலில் தாத்தாவின் 80வது பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு வந்த கோபியை ஈஸ்வரியை சரமாரியாக திட்டியுள்ள ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.
பாக்கியலட்சுமி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் ஆயிரம் எபிசோட்டை தாண்டி சென்று கொண்டிருக்கின்றது. நடுத்தர குடும்ப பெண் புகுந்த வீட்டில் சந்திக்கும் பிரச்சனையை வைத்து எடுக்கப்பட்டுள்ளது.
இதில் பாக்கியாவிற்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உள்ளனர். ஒவ்வொரு பிரச்சனையாக வருவதும், செல்வதுமாக இருக்கும் நிலையில், தற்போது வீட்டில் விழா ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளனர்.
அதாவது தாத்தாவிற்கு 80வது பிறந்தநாள் விழாவை கோலாகலமாக கொண்டாடியுள்ளனர். இதற்கு கோபி வந்துள்ள நிலையில், தாத்தா மற்றும் பாட்டி இருவரும் சரமாரியாக சத்தம் போட்டுள்ளனர்.
தாயின் வாயிலிருந்து செத்தா கூட வரக்கூடாது என்ற வார்த்தையை கேட்ட கோபி உச்சக்கட்ட அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |