கூடு விட்டு இறக்கை விரித்து பறந்துட்டாரு.. பாக்கியலட்சுமி எழில் பற்றி மறைமுகமாக பேசிய கோபி
பாக்கியலட்சுமி எழில் கதாபாத்திரம் குறித்து கோபி மறைமுகமாக பேசி காணொளியொன்றை பகிர்ந்துள்ளார்.
பாக்கியலட்சுமி
பிரபல தொலைக்காட்சியில் 1000 எபிசோடை கடந்து ஓடி கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி.
இந்த சீரியலில் நடிக்கும் கதாபாத்திரங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவிட்டதால் இன்று வரை சுவாரஸ்யமாக சென்றுக் கொண்டிருக்கின்றது.
அந்த வகையில், தற்போது பாக்கியா - கோபியின் கதை முடிந்து ராதிகா - கோபியின் கதை ஆரம்பமாகியுள்ளது.
தோலுக்கு மேல் வளர்ந்த பிள்ளைகளை வைத்து கொண்டு குழந்தை பெற்றுக் கொள்ளும் முயற்சியில் கோபி இறங்கியுள்ளார். இதற்கு செழியன் மற்றும் எழில் இருவருமே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
எழில் கதாபாத்திரத்தில் வந்த மாற்றம்
இந்த நிலையில் ராதிகா, ஈஸ்வரி இருவரையுமே கோபி ராதிகா வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். ராதிகா - அம்மாவிற்கு ஈஸ்வரி வீட்டிற்குள் வருவது பிடிக்கவில்லை. இதனால் ஈஸ்வரிக்கு பிடிக்காத வேலைகளை தொடர்ந்து பார்த்து வருகிறார்.
தற்போது மனைவி, அம்மா இருவரையும் ஒரே வீட்டில் வைத்து கொண்டு கோபி மண்டையை பிய்த்து கொள்கிறார்.
சீரியலில் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் சதீஸ் அவரது சமூக வலைத்தளங்களிலும் அதீத ஆர்வம் காட்டி வருகிறார்.
அந்த வகையில், சீரியலில் எழில் கதாபாத்திரத்தில் நடித்து வந்த விஷால் சீரியலை விட்டு சென்றுள்ளார்.
இது குறித்த காணொளி வெளியிட்ட சதீஸ், கூடு விட்டு றக்கையை விரித்து பறந்துட்டாரு.. நல்லா இருக்கணும். என்று ஏதோ மறைமுகமாக கூறியிருக்கிறார்.
கோபி இப்படி பேசியது ரசிகர்களை சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளார். மேலும் “எழிலுக்கு விஷால் தான் சரி..”என்றும் ரசிகர்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |