அடுத்தடுத்து வெடிக்கும் சண்டை.. ஈஸ்வரியை திருப்பி அனுப்புவாரா கோபி?
ஈஸ்வரி திருப்பி அனுப்புமாறு ராதிகா - கோபியிடம் கோபமாக கூறுகிறார்.
பாக்கியலட்சுமி
பிரபல தொலைக்காட்சியில் 1000 எபிசோடை கடந்து ஓடி கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி.
இந்த சீரியலில் நடிக்கும் கதாபாத்திரங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவிட்டதால் இன்று வரை சுவாரஸ்யமாக சென்றுக் கொண்டிருக்கின்றது.
அந்த வகையில், தற்போது பாக்கியா - கோபியின் கதை முடிந்து ராதிகா - கோபியின் கதை ஆரம்பமாகியுள்ளது.
தோலுக்கு மேல் வளர்ந்த பிள்ளைகளை வைத்து கொண்டு குழந்தை பெற்றுக் கொள்ளும் முயற்சியில் கோபி இறங்கியுள்ளார். இதற்கு செழியன் மற்றும் எழில் இருவருமே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
திருப்பி அனுப்புவாரா கோபி?
இந்த நிலையில் ராதிகா, ஈஸ்வரி இருவரையுமே கோபி ராதிகா வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். ராதிகா - அம்மாவிற்கு ஈஸ்வரி வீட்டிற்குள் வருவது பிடிக்கவில்லை. இதனால் ஈஸ்வரிக்கு பிடிக்காத வேலைகளை தொடர்ந்து பார்த்து வருகிறார்.
இதனால் கடுப்பான ஈஸ்வரி கோபியிடம் இவர்கள் செய்பவைகளை குறையாக கூறுகிறார்.
இதனை தொடர்ந்து, இரவு தூங்குவதற்கு அறையில்லாமல் ஈஸ்வரி நிற்க, யாரும் எதிர்பார்க்காத வகையில் மயூ மற்றும் ராதிகா - அம்மா இருவரையும் வெளியே தள்ளிவிட்டு ஈஸ்வரி அவர்களின் அறையை எடுத்து கொள்கிறார்.
ஈஸ்வரியின் இந்நடத்தையை ராதிகாவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இதனால் கடுப்பான ராதிகா, “ எப்படியாவது உங்க அம்மாவை இரண்டு நாட்களில் திருப்பி அனுப்பி வையுங்கள்..” என கண்டிப்புடன் கூறி விடுகிறார்.
இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ காட்சிகள் வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |