Baakiyalakshmi: பரிதவிக்கும் கோபி.. உடனே கூண்டில் ஏறி பாக்கியா சொன்ன வார்த்தை- கமலா மாட்டுவாரா?
அம்மாவை கூண்டில் ஏற்றியதை தாக்கிக் கொள்ள முடியாமல் கோபி பரித்தவித்து நிற்கிறார்.
பாக்கியலட்சுமி
பிரபல தொலைக்காட்சியில் 1000 எபிசோடை கடந்து ஓடி கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி.
இந்த சீரியலில் நடிக்கும் கதாபாத்திரங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவிட்டதால் இன்று வரை சுவாரஸ்யமாக சென்றுக் கொண்டிருக்கின்றது.
அந்த வகையில், கமலா ஈஸ்வரி தன்னுடைய பேரக்குழந்தையை கொன்று விட்டதாக பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் பொலிஸார் ஈஸ்வரியை கைது செய்துள்ளனர். இதனை தொடர்ந்து ஈஸ்வரியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உள்ளனர்.
மாமியாருக்கு சார்பாக பேசும் பாக்கியா
இந்த நிலையில் பாக்கியா குடும்பத்துடன் நீதிமன்றத்திற்கு வந்துள்ளார். ஈஸ்வரியை குற்றவாளியாக்குவதற்காக கமலாவும், ராதிகாவும் மாறி மாறி வாக்குமூலம் கொடுக்கிறார்கள்.
பாக்கியா குடும்பத்திலிருந்து முதல் ஆளாக பாக்கியாவை கூண்டில் ஏற்றுகிறார்கள். அப்போது பாக்கியா, “ கணவர் இல்லாவிட்டாலும் என்னுடைய குடும்பம் என்னை விட்டு கொடுக்கவில்லை.
அவர்களின் அனுமதியுடன் தான் கோபியின் அம்மா - அப்பாவுடன் இருக்கிறேன்.” என்பது போல் அவர் பக்கம் உள்ள கருத்துக்களை முன் வைக்கிறார்.
அத்துடன் தன்னுடைய மாமியார் இப்படியொரு வேலையை செய்திருக்க மாட்டார் என்பதையும் உறுதியாக கூறுகிறார்.
இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |