நீ எங்க மருமகளாக இருக்க தகுதியில்லாதவ மா! ராதிகாவை கிழித்து தொங்க விட்ட தாத்தா
நா மருமகள் இல்லை என்றால் அப்போ ஏன் ஏ வீட்டில் இருக்கீங்க என கோபியின் அப்பாவை ராதிகா சரமாறியாக திட்டியுள்ளார்.
பாக்கியலட்சுமி சீரியல்
பிரபல தொலைக்காட்சியில் மிகவும் விறுவிறுப்பாக நகரும் தொடர்களில் பாக்கியலட்சுமி சீரியல் முதல் இடத்தை பிடிக்கிறது.
இந்த சீரியல் ஆரம்பத்தில் சுமாரான கதைக்களமாக நகர்ந்தாலும் கோபிக்கு இரண்டாவது திருமணம் நடைப்பெற்றதிலிருந்து பாக்கியலட்சுமி சீரியல் சுவாரஸ்யத்தின் உச்சத்திற்கே சென்றுள்ளது.
கோபி - ராதிகாவை திருமணம் செய்த பின்னர் வாடகை வீட்டில் ராதிகாவுடன் வசித்து வருகிறார். தற்போது தாத்தாவும், இனியாவும் சேர்ந்து கோபியின் வீட்டில் இருக்கிறார்கள்.
இதனால் இவர்கள் ராதிகாவை மருமகளாக ஏற்றுக் கொண்டார்கள் என ராதிகா நினைத்து கொண்டிருந்தார். ஆனால் “அது அப்படி ஒன்றும் இல்லை பாக்கியா தான் என்றும் எங்கள் மருமகள்” என ஆணித்தனமாக கூறியுள்ளார்.
பாக்கியாவை விரட்டுவதற்கு பிளான் போட்ட ராதிகா
இதனை தொடர்ந்து கடந்த எபிசோட்களில் பாக்கியவாவை கோபியின் வீட்டை விட்டு துறத்த வேண்டும் என ராதிகா திட்டம் தீட்டுவது போல் காட்டப்பட்டது.
இந்த நிலையில் திறப்பு விழாவில் பாட்டி ராதிகாவை அசிங்கப்படுத்தியதிலிருந்து இவர் அந்த வீட்டில் மருமகளாக வேண்டும் என அனைத்து வேலைகளையும் பார்த்து வருகிறார். இதற்காக கோபியை சரமாறிய திட்டி வருகிறார் ராதிகா.
ராதிகாவின் இந்த முடிவிற்கு கோபியும் ஒப்புக் கொள்வார் என்றால் சீரியல் இன்றும் சுவாரஸ்யமாக இருக்கும் என கருத்துக்களை ரசிகர்கள் பதிவு செய்து வருகிறார்கள்.