சீல் வைக்கப்பட்ட பாக்கியாவின் கேன்டீன்... பரபரப்பான அதிர்ச்சி ப்ரொமோ
பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா பொருட்காட்சி ஆர்டரை பெற்றுள்ள வில்லன் செய்த சதியால் கேன்டீன் சீல் வைக்கப்பட்டுள்ளது.
பாக்கியலட்சுமி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கிலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், டிஆர்பி-யிலும் முன்னணியில் இருந்து வருகின்றது.
பாக்யாவை வேண்டாம் என்று விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை திருமணம் செய்து தனியாக இருந்து வந்த நிலையில் தற்போது பாக்கியாவின் வீட்டிற்கே வந்துள்ளார்.
கோபி தனது அம்மாவுடன் சேர்ந்து பாக்கியாவிற்கு நெருக்கடி கொடுத்து வரும் நிலையில், ராதிகா அவருக்கு சப்போர்ட் செய்து வருகின்றார்.
இந்நிலையில் பாக்கியா பொருட்காட்சியில் சமையல் ஆர்டரை வாங்கி பிரம்மாண்டமாக அழகு படுத்தி கடையை திறந்துள்ளார். இதற்கு ராதிகாவும் மாஸாக வந்து பாக்கியாவிற்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.
கடைக்கு மீண்டும் சீல்
இந்த நிலையில் பழனிச்சாமியிடம் பாக்கியாவின் திருமணத்தை குறித்து கேட்டதற்கு அவர் மழுப்பலாக பதில் அளித்துள்ளார்.
தற்போது கேன்டீன் ஆர்டரை பெற முடியாத கோபத்தில் வில்லன் ஒருவன் செய்த சதியால் பாக்கியாவின் கேன்டீன் சீல் வைக்கப்பட்டுள்ளது.
இதனால் அதிர்ச்சியில் பாக்கியா உறைந்துள்ளார். இக்காட்சியானது இன்றைய நிகழ்ச்சி முடிந்த பின்பு ப்ரொமோவாக வெளியாகியுள்ளது.
பாக்கியா அடுத்ததாக என்ன செய்யப்போகின்றார் என்ற கேள்வி ரசிகர்களிடையே அதிகமாக எழுந்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |