Baakiyalakshmi: எரிமலையாய் வெடித்த பாக்கியாவின் ஒற்றை வார்த்தை... பேரதிர்ச்சியில் குடும்பம்
பாக்கியலட்சுமி சீரியலில் கோபிக்கு ஆதரவாக ஈஸ்வரி பேசிக் கொண்டிருக்கையில், பாக்கியா சட்டென தனது முடிவைக் கூறி குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
பாக்கியலட்சுமி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளது.
நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பெண் கணவர் வீட்டில் சந்திக்கும் பிரச்சனைகள் மற்றும் அவர் துணையில்லாமல் வாழ்ந்து காட்டும் கதையை கொண்டு செல்கின்றது.
கணவர் எவ்வளவு தான் கெட்டவனாக இருந்தாலும், தான் செய்ய வேண்டிய கடமைகளை தற்போது வரை பாக்கியா சரியாக செய்து அசத்தி வருகின்றார்.
கோபி உடல்நிலை சரியில்லாததால் பாக்கியாவின் வீட்டில் இருந்து வருகின்றார். ஈஸ்வரி பாக்கியாவையும், கோபியையும் சேர்த்து வைப்பதற்கு திட்டம் போட்டு வருகின்றார்.
ஆனால் பாக்கியா கோபியை வீட்டைவிட்டு கிளம்புமாறு கூறியுள்ளார். இதனால் மீண்டும் நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில், ஈஸ்வரி தனது மகன் இங்கு தான் இருப்பான் என்று பாக்கியாவிடம் சண்டையிட்டுள்ளார்.
இதற்கு பாக்கியா அப்போ நான் இந்த வீட்டை விட்டு போறேன் என்று கூறி ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |