Baakiyalakshmi: வார்த்தையால் விளாசிய பாக்கியா... பதறியடித்து ராதிகாவிடம் சென்ற கோபி
பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா கோபியை தனது வார்த்தையால் விளாசியுள்ள நிலையில் பதறியடித்து ராதிகாவை பார்ப்பதற்கு கோபி சென்றுள்ளார்.
பாக்கியலட்சுமி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளது.
நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பெண் கணவர் வீட்டில் சந்திக்கும் பிரச்சனைகள் மற்றும் அவர் துணையில்லாமல் வாழ்ந்து காட்டும் கதையை கொண்டு செல்கின்றது.
கணவர் கெட்டவராக இருந்தாலும் தனது கடமையை சரியாக செய்து வருகின்றார். தற்போது கோபி பாக்கியா வீட்டில் தான் வசித்து வருகின்றார்.
பாக்கியா அவரை வீட்டை விட்டு செல்லுமாறு கூறி சண்டை போட்டு வரும் நிலையில், ராதிகா தனது வாழ்க்கையில் எடுத்துள்ள முடிவு பாக்கியாவை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
அதாவது கோபியை தனியாக பேச அழைத்து, ராதிகா படும் துயரத்தினை பாக்கியா விளக்கியுள்ளார்.
பின்பு கோபி தனது தாயாரின் பேச்சைக் கூட கேட்காமல் தனது ராதிகாவை சென்று பார்பபவருகின்றார். மற்றொரு புறம் ராதிகா வீட்டை காலி செய்து வெளியேற உள்ள நிலையில், அவரை பாக்கியா சந்தித்துள்ளார்.
இனியா நடனத்தில் வெற்றிபெற்றுள்ள நிலையில், அவரை அடுத்த கட்டத்திற்கு கோபியுடன் அனுப்பி வைத்துள்ளார். கோபி தான் பார்த்துக் கொள்வதாக இனியாவை அழைத்துச் செல்கின்றார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |