கர்ப்பமான நிலையில் கண்ணாடி முன் நின்று வயிற்றை காட்டி புகைப்படத்தை வெளியிட்ட பாக்கியலட்சுமி சீரியல் நடிகை!
விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வரும் தொடர் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில், ஹீரோயின் பாக்கியலட்சுமியின் தோழியாக, அவரது கணவர் கோபியின் முன்னாள் காதலியாக ராதிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் நடிகை ஜெனிஃபர்.
இதையடுத்து, இந்த தொடரில் இருந்து விலகிய இவர், தற்போது பிக்பாஸ் புகழ் ரேஷ்மா பசுபுலேடி ராதிகாவாக நடித்து வருகிறார். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஜெனிபர் கர்ப்பகால புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வந்தார்.
இதனிடையே, அவர் தற்போது கர்ப்பமாக இருக்கும் தனது வயிற்றை காட்டி கண்ணாடி முன்பு நின்று புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அது வைரலான நிலையில் பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.