Baakiyalakshmi: கண்ணீர் விட்டு கதறும் ஈஸ்வரி- இடியாக விழுந்த நீதிமன்ற தீர்ப்பு
ராதிகாவிற்கு சார்பாக நீதி மன்றத்தில் தீர்ப்பு வந்ததால் அனைவரும் கண்ணீரில் முழ்கியுள்ளனர்.
பாக்கியலட்சுமி
பிரபல தொலைக்காட்சியில் 1000 எபிசோடை கடந்து ஓடி கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி.
இந்த சீரியலில் நடிக்கும் கதாபாத்திரங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவிட்டதால் இன்று வரை சுவாரஸ்யமாக சென்றுக் கொண்டிருக்கின்றது.
அந்த வகையில், கமலா ஈஸ்வரி தன்னுடைய பேரக்குழந்தையை கொன்று விட்டதாக பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் பொலிஸார் ஈஸ்வரியை கைது செய்ய சென்றபோது அவர் வீட்டில் இல்லை.
இடியாக விழுந்த நீதிமன்ற தீர்ப்பு
இந்த நிலையில் அடுத்த நாள் வருவோம், அ்ப்போது ஈஸ்வரி வீட்டில் இருக்க வேண்டும் என பொலிஸார் வீட்டிலுள்ளவர்களிடம் கூறி செல்கிறார்கள்.
இதனை தொடர்ந்து ஈஸ்வரி ஊரிலிருந்து வந்தவுடன் கைது செய்யப்பட்டார்.
ராதிகாவின் வழக்கு நீதி மன்ற விசாரணைக்கு போது ஈஸ்வரி மீது தான் குற்றம் என நிரூபிக்கப்பட்டுள்ளது.
மேலும் கோபியே இவர்களுக்கு எதிராக வாக்குமூலம் கொடுத்தால் பாக்கியா உட்பட அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இப்படியொரு சம்பவத்தை தொடர்ந்து இனி ராதிகாவை சேர்த்து கொண்டு கோபி வாழ்வாரா? என்பதனை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இப்படியாக இன்றைய ப்ரோமோ வெளியாகியுள்ளது.
மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பாலிவுட் நடிகை: தலைமுடி வெட்டும் நேரத்தில் கண்ணீர் விட்டு கதறிய தாய்
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |