கோபிக்கு நெற்றியில் அடித்தார் போல் பதிலடி கொடுத்த ராதிகா- பரபரப்பான தருணங்கள்..
பாக்கியாவிற்கு சார்பாக பேசிய ராதிகாவை பார்த்து கோபி அதிர்ச்சியடைந்துள்ளார்.
பாக்கியலட்சுமி
பிரபல தொலைக்காட்சியில் முன்னணி சீரியலாக மாஸ் காட்டி வரும் பாக்கியலட்சுமி தற்போது விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கின்றது.
பாக்கியா நீண்ட நாள் போராட்டத்திற்கு பிறகு பொருட்காட்சியக கேன்டீனை பெற்று வேலையை துவங்குகிறார்.
இதற்காக ஈஸ்வரியை தவிர்த்து வீட்டிலுள்ள அனைவரும் சென்று தன்னால் முடிந்த உதவியை செய்கிறார்கள்.
இதனை பொருத்து கொள்ள முடியாத கோபி அவரின் பிரச்சினைகளை தூர வைத்து விட்டு பாக்கியா என்ன செய்கிறார் என்பதனை பார்த்து பொறாமைப்பட்டு கொண்டிருக்கிறார்.
மேலும் ராதிகாவும் பாக்கியாவிற்கு ஆதரவு தெரிவிப்பதால் தற்போது படும் குழப்பத்தில் கோபி இருக்கிறார். இப்படியொரு நிலையில் பாக்கியாவின் கேன்டீன் சதி வேலையால் சீல் வைக்கப்படுகின்றது.
இதனை பழனிச்சாமியின் உதவியுடன் நகர்த்து எறிகிறார் பாக்கியா. மீண்டும் கேன்டீன் திறக்கப்பட்டு வேலைகள் துவங்கியுள்ளன.
கடுப்பான கோபி
இந்த நிலையில் பாக்கியாவிற்கு ஆதரவாக ராதிகா பேசுவதால் கோபிக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ராதிகாவிடம் சென்று “பாக்கியாவிற்கு ஏன் சர்போர்ட்டாக இருக்க? ” என கேட்டுள்ளார்.
இதற்கு கோபம் கொள்ளாமல் அமைதியாக, “ என்னை போல் அவரும் பெண் தானே அவரின் வெற்றியை பார்க்க சந்தோசமாக இருக்கின்றது..” என்பது போல் ராதிகா பதிலளிக்கிறார்.
அத்துடன் நிறுத்தாமல் “ அப்போ ஏன் உன்னுடைய நிறுவனத்திலிருந்து பாக்கியாவை வெளியில் அனுப்புன..” என கேட்கிறார். அதற்கு ராதிகா, “ அங்கிருந்து நா அனுப்பியதால் தான் இன்று இவ்வளவு பெரிய கேன்டீன் ஓடர் பாக்கியாவிற்கு கிடைத்துள்ளது..” என புன்னகையுடன் கூறுகிறார்.
இவ்வாறு இந்த வாரத்திற்கான பாக்கியலட்சுமி சீரியல் ப்ரோமோ முடிவடைந்துள்ளது. மேலும் இதனை பார்த்த ரசிகர்கள், “ சபாஷ் ராதிகா” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |