பிரச்சினைக்கு தீர்வு கொடுத்த கோபி.. மொட்டை மாடியில் வசமாக சிக்கிய எழில்-செழியன்- இனி நடக்க போவது என்ன?
மகன்களின் பிரச்சினைக்கு தீர்வு கொடுத்த கோபி, பாக்கியாவிடம் வசமாக சிக்கிக் கொள்கிறார்.
பாக்கியலட்சுமி
பிரபல தொலைக்காட்சியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று தான் பாக்கியலட்சுமி.
அந்தவகையில், தொடர்ந்து கடன் பிரச்சினையால் கோபி தன்னுடைய நிறுவனத்தை மூடி விட்டு வேலை பார்ப்பவர்களுக்கு கூட சம்பளம் கொடுக்க முடியாத நிலைக்கு வந்து விடுகிறார்.
நிறுவனத்தை மூடிய சோகத்தில் கன்னாபின்னாவென்று குடித்து விட்டு வீட்டிற்குள் வருகிறார்.
ஈஸ்வரி, இராமமூர்த்தி இருவருமே ஹாலில் உட்கார்ந்து இருக்க, அவர்களிடம் மாட்டி கொள்ளாமல் மாடிக்கு போய்விட வேண்டும் என நினைத்து கொண்டு கோபி மெதுவாக நகர்கிறார்.
அம்மாவிடம் பொய் கூறி விட்டு சென்ற கோபி ராதிகாவிடம் வசமாக சிக்கிக் கொள்கிறார்.
குடித்திருப்பதை கண்டுபிடித்த ராதிகா கடுமையாக திட்டி விட்டு அறைக்குள் அழைத்து செல்கிறார்.
கடுப்பான பாக்கியா
இப்படி ஒரு புறம் சென்றுக் கொண்டிருக்கையில், இன்றைய தினம் வெளியான ப்ரோமோவை பார்த்த பாக்கியலட்சுமி ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அதாவது, மன கஷ்டம் தாங்க முடியாமல் கோபி குடித்து அலப்பறை செய்வது போதாது என அவரின் இரண்டு மகன்களுக்கும் மதுபானம் வாங்கி கொடுத்துள்ளார்.
செழியன்- எழில் ஆகிய இருவரும் குடித்து கொண்டிருக்கும் பொழுது பாக்கியா மொட்டை மாடிக்கு வருகிறார். இதனால் மூவரும் வசமாக சிக்கிக் கொள்கிறார்கள்.
பாக்கியாவை பார்த்த கோபி, “ இதற்கு நான் காரணம் இல்லை..” என்கிறார். கடுப்பான பாக்கியா இதற்கு என்ன முடிவு எடுக்க போகிறார் என்பதனை தொடர்ந்து எபிசோட்டில் பாரக்கலாம்.
இப்படியாக இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
இதனை பார்த்த சீரியல் ரசிகர்கள், “ இப்படியொரு தகப்பன் இருந்தால் போதும் பிள்ளைகள் வீணாகி விடுவார்கள்..” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |