நடுராத்தியில் விபரீத முடிவு எடுக்கும் இனியா- பாக்கியாவிற்கு தெரியாமல் எழுதப்படும் கடிதம்- சுவாரஸ்யமான நகர்வு
பிரச்சனையால் கடுமையான மன உளைச்சலில் இருக்கும் இனியா விபரீத முடிவு எடுக்கிறார்.
பாக்கியலட்சுமி
பிரபல டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில்களில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் இன்று வரை விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி.
இந்த சீரியல் டிஆர்பியில் முன்னணி இடத்தில் இருந்து வருகிறது.
அதே சமயம் இயக்குனர், ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு பிரச்சனையை வைத்து ரசிகர்கள் மத்தியில் சீரியலின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி வருகிறார்.
இவ்வளவு பிரச்சினைகளுக்கும் குடும்ப பெண்ணாக இருந்து பாக்கியா எப்படி தைரியமாக எதிர்கொள்கிறார் மற்றும் குடும்பத்திற்காக என்னென்ன விடயங்களை தியாகம் செய்கிறார் என்பதனை கருப்பொருளாக வைத்தே கதை நகர்ந்து கொண்டிருக்கிறது.
விபரீத முடிவு எடுக்கும் இனியா
இந்த நிலையில் இனியா நைட் பார்ட்டிக்கு சென்ற விடயம் கல்லூரி அதிபர் வரை செல்கிறது. இதனால் இனியாவை கல்லூரியை விட்டு விலக்கும் முடிவில் அதிபர் இருக்கிறார்.
இதனை தொடர்ந்து பாக்கியா, ஈஸ்வரி, தாத்தா அனைவரும் கல்லூரிக்கு சென்று இனியாவிற்கு ஒரு முறை மன்னிப்பு வாங்கிக் கொடுக்கிறார்கள். பின்னர் இனியாவிற்கு சில ஆலோசணைகளை பாக்கியா வழங்குகிறார்.
இந்த பிரச்சினையால் கடும் மன உளைச்சலில் இருக்கும் இனியா, கடிதம் எழுதி வைத்து விட்டு வீட்டை விட்டு வெளியேறும் முடிவில் இறங்கியுள்ளார். இதற்காக நடுராத்தியில் பாக்கியாவிற்கு கடிதம் எழுதிக் கொண்டிருக்கிறார்.
இனி வரும் நாட்களில் இனியா வீட்டை விட்டு வெளியே போவாரா? இல்லை தவறான முடிவை எடுப்பாரா? போன்ற விறுவிறுப்பில் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |