Baakiyalakshmi: பாக்கியாவிடமிருந்து பிள்ளைகளை பிரிக்க கோபி போடும் பிளான்
பாக்கியலட்சுமி சீரியலில் கோபியை ஒட்டுமொத்த குடும்பமும் ஒதுக்கியுள்ள நிலையில், குழந்தைகளை பாக்கியாவிடமிருந்து கோபி புதிய பிளான் போடுவது போன்று கதை செல்கின்றது.
பாக்கியலட்சுமி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் ஆயிரம் எபிசோட்டை தாண்டி சென்று கொண்டிருக்கின்றது. நடுத்தர குடும்ப பெண் புகுந்த வீட்டில் சந்திக்கும் பிரச்சனையை வைத்து எடுக்கப்பட்டுள்ளது.
இதில் பாக்கியாவிற்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உள்ளனர். ஒவ்வொரு பிரச்சனையாக வருவதும், செல்வதுமாக இருக்கும் நிலையில், தற்போது வீட்டில் விழா ஒன்றினை ஏற்பாடு செய்து அதனையும் சிறப்பாக நடத்தியுள்ளார்.
ஆனால் கோபியை வீட்டில் யாரும் ஏற்றுக்கொள்ளாத நிலையில், கோபத்தில் பாக்கியாவை சத்தம் போட்டுள்ளார்.
இப்பொழுது எப்படி என்னுடைய குடும்பத்தை என்னிடம் இருந்து பிரித்து தனியா ஆக்கினியோ, அதே மாதிரி உன்னையும் தனி மரமாக நிற்க வைக்கிறேன் என்று சவால் விடும் அளவிற்கு கோபி துணிந்து விட்டார்.
அந்த வகையில் இனி பாக்யாவிடம் இருந்து பிள்ளைகளை பிரிக்கும் விதமான ஏதாவது தில்லாலங்கடி வேலையை செய்யப் போகிறார் என்று மக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |