இனியாவுக்கு விழுந்த அறை- நெஞ்சுவலியால் துடிக்கும் கோபி- பாக்கியா எடுத்த விபரீத முடிவால் ராதிகா அதிர்ச்சி
ராதிகாவிடம் மோசமாக நடந்து கொண்ட இனியாவை பாக்கியா ஓங்கி அறைந்துள்ளார்.
பாக்கியலட்சுமி
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளது.
நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பெண், கணவர் வீட்டில் சந்திக்கும் பிரச்சனைகள் மற்றும் அவர் துணையில்லாமல் வாழ்ந்து காட்டும் கதையை கருவாக வைத்து இந்த சீரியல் நகர்ந்து கொண்டிருக்கிறது.
கணவர் எவ்வளவு தான் கெட்டவனாக இருந்தாலும், தான் செய்ய வேண்டிய கடமைகளை தற்போது வரை பாக்கியா சரியாக செய்து அசத்தி வருகிறார்.
அதே சமயம், கோபி உடல்நிலை சரியில்லாததால் பாக்கியாவின் வீட்டில் இருந்து வருகிறார். இதற்கு ஈஸ்வரியும் வீட்டிலுள்ள அனைவரும் ஆதரவு வழங்குகிறார்கள். ஆனால் பாக்கியாவிற்கு கோபி அவர் வீட்டில் இருப்பது துளியளவும் விருப்பம் இல்லை.
கோபியின் நடிப்பை பொறுத்து கொள்ள முடியாத பாக்கியா கோபியை வீட்டை விட்டு கிளம்புமாறு கூறுகிறார். இதனால் மீண்டும் நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில், ஈஸ்வரி தனது மகன் இங்கு தான் இருப்பான் என்று பாக்கியாவிடம் சண்டையிடுகிறார்.
பாக்கியா எடுத்த விபரீத முடிவு
இந்த நிலையில், ராதிகா தான் வீடு மாறிப்போக விரும்புவதாகவும், கோபியை தன்னுடன் அழைத்து செல்ல வந்துள்ளதாகவும் பாக்கியா வீட்டிற்கு வந்து கூறுகிறார்கள்.
கோபி- ராதிகா இருவருக்கும் பிரச்சினை வெடிக்க ஆரம்பித்த போது, கோபிக்கு கடுமையான நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுகிறார். இதனால் வீட்டிலுள்ளவர்கள் இதற்கு ராதிகா தான் காரணம் என நினைத்து அவரை திட்டுகிறார்கள்.
அதிலும் குறிப்பாக ராதிகா பார்த்து, “ இனி நீங்க எங்க அப்பாவை தேடி வராதீங்க.. அவரை கொன்னுறாதீங்க..” என கடுமையாக இனியா பேசுகிறார்.
இனியாவின் அதிகபிரசங்கி தனத்தை பொறுத்துக் கொள்ள முடியாத பாக்கியா, ராதிகா கண் முன்னரே பளார் என ஒரு அறை விடுகிறார். பாக்கியா இப்படி நடந்து கொள்வதை அவதானித்த ராதிகா அதிர்ச்சியுடன் தடுக்கிறார்.
இப்படியாக இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |