சீரியலில் குடும்ப பெண்ணாக இருக்கும் பாக்கியாவா இது? மாடர்னாக மாறி வெளியிட்ட புகைப்படம்
பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியாவாக நடித்து வரும் சுசித்ரா புடவையில் மிகவும் மாடர்னாக வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பாக்கியலட்சுமி சுசித்ரா
பாக்கியலட்சுமி சீரியலில் ஒட்டுமொத்த பெண் ரசிகைகளை கட்டிப் போட்டு வைத்திருக்கும் பாக்கியா அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காணொளி மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.
சாதாரண குடும்பத்தில் குடும்பத்தலைவிகள் படும் கஷ்டங்கள் அதனை சமாளித்து அவர்கள் முன்னேறும் விதம் இவற்றினையே கதையாக அமைத்துள்ளனர்.
கணவர் தன்னை விவாகரத்து செய்தாலும் சோர்ந்து போகாத பாக்கிய தனி ஆளாக நின்று தனது குடும்பதை கவனித்து வருவதுடன், சுயமாகவும் தொழில் செய்து வருகின்றார்.
இந்நிலையில் பாக்கியா குறித்த சீரியலில் சாதாரண குடும்ப பெண்களைப் போன்று மிகவும் சிம்பிளாக இருக்கும் நிலையில், தற்போது மாடர்னாக தனது முடியை அலங்காரம் செய்து அட்டகாசமாக இருக்கும் புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.