Baakiyalakshmi: பழனிச்சாமியுடன் இரண்டாவது திருமணம்... பளார் என பதிலடி கொடுத்த பாக்கியா
பாக்கியலட்சுமி சீரியலில் பழனிச்சாமியை இரண்டாவது திருமணம் செய்வது குறித்து கேள்விப்பட்ட பாக்கியா தற்போது அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
பாக்கியலட்சுமி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கிலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், டிஆர்பி-யிலும் முன்னணியில் இருந்து வருகின்றது.
வீட்டில் எந்தவொரு பிரச்சினையாக இருந்தாலும் சமாளித்து கெத்து காட்டி வருகின்றார் பாக்கியா. ராதிகாவின் கர்ப்பத்தால் கோபியை அனைவரும் வீட்டை விட்டு வெளியேற்றிய நிலையில் கோபியுடன் சேர்ந்து அவரது அம்மா ஈஸ்வரியும் வெளியேறியுள்ளார்.
ராதிகாவின் வீட்டில் ஈஸ்வரி பல சிக்கல்களை அனுபவித்து வருகின்றார். தற்போது ராதிகாவின் கர்ப்பம் எதிர்பாராத விதமாக கலைந்துள்ளது.
இரண்டாவது திருமணத்திற்கு முற்றுப்புள்ளி
ராதிகாவின் கர்ப்பம் கலைவதற்கு ஈஸ்வரி தான் என்று குற்றம் சுமத்தியுள்ளனர். இனியாவின் பிறந்தநாளில் கலந்து கொள்ள வந்த பழனிச்சாமியின் அக்கா அங்கு பாக்கியாவிற்கும், பழனிச்சாமிக்கும் திருமணம் செய்து வைப்பது குறித்து கோபியிடம் பேசியுள்ளார்.
அர்ஜுன் மகள் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரபலங்கள் யார் யார்னு தெரியுமா? வைரலாகும் புகைப்படங்கள்
இதனைக் கேட்டு வந்த கோபி பாக்கியாவிடம் கடும் கோபத்தில் கொந்தளித்துள்ளார். இதுவரை திருமணம் விவகாரம் தெரியாமல் இருந்த பாக்கியா கடும் அதிர்ச்சியில் ஆழ்ந்தார்.
பின்பு பழனிச்சாமியின் வீட்டிற்கே வந்து திருமணத்தில் தனக்கு உடன்பாடு இல்லை என்பதை பாக்கியா கூறியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |