Baakiyalakshmi: அப்பா என்று கதறிய பாக்கியா! சுடுகாட்டில் மன்னிப்பு கேட்ட கோபி
பாக்கியலட்சுமி சீரியலில் இறந்த மாமனாருக்கு பாக்கியா இறுதி சடங்கு செய்துள்ள நிலையில், கோபி மைதானத்தில் இறந்த தந்தையிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
பாக்கியலட்சுமி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் ஆயிரம் எபிசோட்டை தாண்டி சென்று கொண்டிருக்கின்றது. நடுத்தர குடும்ப பெண் புகுந்த வீட்டில் சந்திக்கும் பிரச்சனையை வைத்து எடுக்கப்பட்டுள்ளது.
எந்தவொரு பிரச்சனையாக இருந்தாலும் நின்று சமாளிக்கும் பாக்கியா தற்போது மிகப்பெரிய இழப்பை சந்தித்துள்ளார். ஆம் தன்னை அதிகமாக நேசித்து பாசம் வைத்த மாமனார் திடீரென உயிரிழந்துள்ளார்.
இறந்த கணவருக்கு பாக்கியா தான் எல்லா இறுதி காரியத்தை செய்ய வேண்டும் என்று ஈஸ்வரி கூறவே பாக்கியாவும் அதன்படியே செய்துள்ளார்.
கதையில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தை இவ்வாறு இறந்ததாக காட்டியுள்ளது பெரும் அதிர்ச்சியை ரசிகர்களிடம் ஏற்படுத்தியுள்ளது.
மேலும் கோபி மையானத்தில் வைத்து இறந்த தந்தையிடம் மன்னிப்பு கேட்டு அழுதுள்ள சம்பவம் காண்பவர்களை கண்கலங்க வைத்துள்ளது..
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |