படிப்பை நிறுத்திய பாக்கியா... திடீர் முடிவிற்கு பின்னணி என்ன?
பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா ஆங்கில வகுப்பை நிறுத்திவிடுவதாக கூறியுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாக்கியலட்சுமி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கிலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், டிஆர்பி-யிலும் முன்னனியில் இருந்து வருகின்றது.
பாக்யாவை வேண்டாம் என்று அவரை விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை திருமணம் செய்து ஒரே வீட்டில் வசித்து வந்த கோபி பாக்கியாவின் சாவாலில் தோல்வியடைந்து வீட்டை விட்டு வெளியேறினார்
இனியா சேர்ந்த கல்லூரியில் பாக்கியாவும் கல்லூரியில் சேர்ந்துள்ளதுடன், தனது மாமியாரிடமும் சம்மதம் பெற்றுள்ளார். இந்நிலையில் பழனிச்சாமியின் அம்மா அவருக்கு பாக்கியாவை திருமணம் செய்ய யோசனை செய்து வருகின்றார்.
கோபி மற்றும் ராதிகா இருவரால் அடுத்தடுத்து பல சிக்கல்களை சந்தித்து வரும் பாக்கியா தற்போது கேண்டீனில் புதிய சிக்கலை சந்தித்து பின்பு மன்னிப்பு கேட்டு மீண்டும் கேண்டீனை பெற்றுள்ளார்.
தற்போது ஆங்கில வகுப்பு, மற்றும் கல்லூரி இவற்றிற்கு சென்றுவருவதால், வீட்டு வேலையில் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக ஆங்கில வகுப்பை நிறுத்தியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |